Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

நீடித்து வரும் ஊரடங்கினால் வீட்டிற்குள் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் பல விதமான செயல்கள் செய்து பொழுதைக் கழித்துவருகின்றனர். இன்னும் சிலர் புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று கூகிளிடம் ஐடியா கேட்டு பல புதிய சமையல் ரெசிபி போன்றவற்றை ட்ரை செய்து வருகின்றனர். என்ன கேள்வி கேட்டாலும் பதில் அளிக்கும் கூகிள் இடம் நீங்கள் சில கேள்விகளை எப்பொழுதுமே கேட்டுவிடக் கூடாது, குறிப்பாக இந்த 12 விஷயங்களைக் கூகிளிடம் கேட்கவே கூடாது.

இணையப் பயனர்களில் பெரும்பாலானோர், தங்களுக்குத் தேவைப்படும் கேள்விக்கான பதிலைக் கூகிள் சர்ச் மூலம் தெரிந்துகொள்வதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிப்படைத் தகவல் முதல், உணவுப் பழக்கம், டயட், சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங், மருத்துவ ஆலோசனை வரை பல தகவல்களைக் கூகிள் சர்ச் இல் பல கோடி பயனர்கள் தேடி வருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இது ஒரு எச்சரிக்கை செய்தி.

முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

பூமியில் ஏற்பட அடுத்த நம்பமுடியாத மிகப்பெரிய மாற்றம் இதுதான்! ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி!

குறிப்பாகப் பொழுது போகாமல் கூட இந்த 12 விஷயங்களை மட்டுமே எப்பொழுதும் கூகுளில் தேடவே செய்யாதீர்கள், ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். இதனால் என்ன ஆபத்துகள் ஏற்படும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

கூகிள் மூலம் முதலில் ஆபாச வலைத்தளங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். ஆபாச தளங்களில் ஆபத்துகளை அதிகம் உள்ளது, கூகிள் அக்கௌன்ட் மூலம் நீங்கள் தேடினால் உங்கள் அக்கௌன்ட் விபரங்கள் முழுதும் அம்பலமாகவும் வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து உஷாராக இருங்கள். நீங்கள் தேடிய “மேட்டர்கள்” அனைத்தும், பிற்காலத்தில் நீங்கள் பார்வையிடும் மற்ற வலைத்தளங்களில் விளம்பரமாக காட்டப்படும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Related Post

அதாவது உங்கள் கூகுள் தேடல் வரலாற்றின் அடிப்படையின் கீழ் உங்களுக்கான விளம்பரங்கள் நீங்கள் பயன்படுத்தும் மற்ற வலைதள பக்கங்களில் பிரதிபலிக்கும் என்பதே இதற்கான பொருள். உங்கள் ஸ்மார்ட்போனில் ஆபாச தேடல்களானது விளம்பரமாக எழாமல் இருக்க வேண்டும் என்றால், கூகிள் மூலம் ஆபாச வலைத்தளம் மற்றும் ஆபாச தகவல்கள் எதையும் அணுக வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூகுள் அட்டகாசம்: போன் நம்பர் இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள புதிய வசதி? எப்போது முதல்?

உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களை Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing) செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி, உங்கள் வங்கியின் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வோர்டை என்டர் செய்வதனால் சிக்கலில் சிக்கிக்கொள்வீர்கள்.

கூகிளில், நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், மோசடி செய்வதற்கான அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் உள்ளது. இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படம், வீடியோக்களை டிவியில் பார்ப்பது எப்படி?

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago