டிவிட்டருக்கு bye சொல்லி மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.!

இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் டிவிட்டர் வலைதளத்தை தான் அதிகளவு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மக்கள் இனி டிவிட்டர் வலைதளமே வேண்டாம என சொல்லி ஒரு அருமையான வலைதளத்திற்கு மாறிவருகின்றனர்.

அந்த அருமையான வலைதளம் என்னவென்று பல்வேறு மக்களுக்கு கேள்வி எழும்? அந்த வலைதளத்தின் பெயர் மஸ்டொடோன், ஜெர்மனியைச் சேர்ந்த யூகன் ரோஹ்கோ என்ற 26வயது இளைஞரால் உருவாக்கப்பட்ட சமூகவலைதளம் தான் இந்த மஸ்டொடோன்.

இந்த மஸ்டொடோன் வலைதளம் தொடங்கப்பட்டு 2வருடங்கள் ஆகிறது, இருந்தபோதிலும் பெருமளவில் பயன்பாட்டாளர்களைப் பெறவில்லை. ஆனால் திடீரென அதிர்ஷ்டம் கதவைத் தட்டியதுபோல கடந்த சில நாட்களில் பல இந்திய வாடிக்கையாளர்களைப் பெறதொடங்கியிருக்கிறது இந்த மஸ்டொடோன்.

ஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்! ஏன் தெரியுமா?

கடந்த சில நாள்களாக டிவிட்டரை சுற்றும் பெரும் சர்ச்சைகள் அனைவரும் தெரியும் என நினைக்கின்றோம். சமீபத்தில் சஞ்சய் ஹெக்டே என்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ட்விட்டர் அக்கவுன்ட் இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்பு இவருடைய பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டதால் டிவிட்டர் இதை செய்திருக்கிறது. hateful or sensitive என்று அதை வரையறுத்தது ட்விட்டர். ஆனால், அவை எதுவும் அப்படியாக அமையவில்லை. அதனால் இவருக்கு ஆதரவாகவும் ட்விட்டரின் நடவடிக்கைக்கு எதிராகவும் பலரும் குரல் கொடுக்கத்தொடங்கினர். அதன்பின்பு அக்கவுன்ட் ஆக்டிவ்வானது ஆனால் அடுத்த நாளே மீண்டும் அவரின் அக்கவுன்ட்டை இடைநீக்கம் செய்தது டிவிட்டர் நிறுவனம்.

Related Post

குறிப்பாக மக்களின் அக்கவுன்ட்களை வெரிஃபை செயய்து ப்ளூ டிக் கொடுக்கும் முறையால் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்றும் பட்டியின மக்கள் சமூக செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் டிவிட்டர் மேல் எழுந்துள்ளது. இதன்பின்பு சஞ்சய் ஹெக்டே டிவிட்டரில் கருத்து சுதந்திரம் முடக்கப்படுகிறது, எனவே மஸ்டொடோன் தளத்துக்கு மாறப்போகிறேன் என்று கூறினார்.

ஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.!

அப்படி பிரலமானது தான் இந்த மஸ்டொடோன். இது டிவிட்டர் போல் அல்லாமல் மிகவும் பாதுகாப்பாக செயல்படுகிறது என்றும் ஹெக்டே தெரிவித்தார். இதற்குபிறகு டிவிட்டரை பலரும் எதிர்த்து மஸ்டொடோன் தளத்துக்கு மாறிவருகின்றனர்.

இந்த மஸ்டொடோன்,அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் கம்யூனிட்டிகளில் நேரடியாக சர்வர் மூலம் சேர வழிகள் அமைத்துக் கொடுக்கும். பின்பு இதில் நாமே வேண்டுமென்றால் ஒலு புதிய கம்யூனிட்டியை உருவாக்க முடியும். நமக்கென்று ஒரு username தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

டிவிட்டரைபோல ஒரு பதிவுக்கு இத்தனை வார்த்தைகள்தான் என்ற வரம்பு உண்டு. ஆனால், டிவிட்டரைப்போல அல்லாமல் (280 கேரக்டர்கள்) இதில் (மஸ்டொடோன்) லிமிட் 500 கேரக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago