Categories: Featured

கால்நடைகளுக்கு அருள்பாலிக்கும் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி

நாகர்கோவில் தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயில். இந்த கோவிலில் சீவலப்பேரி ஸ்ரீ சுடலை மாடசுவாமி, ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீபிரம்ம சக்தி, முண்டன் சுவாமி, புதிய சுவாமி, வீரமணி சுவாமி ஆகிய தெய்வங்கள் இருந்து அருள்பாலிக்கின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இது தவிர பூக்களும் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில் 3 சமுதாயத்தை சேர்ந்த 8 பேர் விவசாய பயன்பாட்டுக்காக மாடு வாங்குவதற்காக திருநெல்வேலிக்கு நடை பயணமாக சென்றனர். அப்போது தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு ஆற்றங்கரை அருகே வீற்றிருந்து அருள் பாலிக்கும் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியிடம், தாங்கள் மாடு வாங்க வந்ததாகவும், எங்களுக்கு நல்ல விதமான மாடு கிடைக்க வேண்டும் எனவும், அவ்வாறு கிடைத்தால் அனைவரும் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்து விட்டு செல்வதாகவும் வேண்டியுள்ளனர்.
சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியிடம் வேண்டி சென்றதால், அவர்களுக்கு சந்தையில் நல்ல விதமான மாடுகள் கிடைத்தது. இந்த சந்தோஷத்தில் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியிடம் வேண்டியதை மறந்து விட்டு மாடுகளுடன் மீண்டும் நடை பயணமாக தோவாளை நோக்கி வந்தனர். இப்போது தோவாளையில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் கோயில் அருகே வரும் போது எட்டு பேரின் மாடுகளும் திடீரென மயங்கி விழுந்தது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். உடனே சிலர் அருகே உள்ள வைத்தியரை அழைத்து சோதனை செய்தனர். அப்போது மாட்டுக்கு எந்த வித நோயும் இல்லை எனவும், ஆனால் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் தெய்வ பிரசன்னம் பார்க்கின்ற சாமியாரை அழைத்து பார்த்தனர். அப்போது 8 பேரும் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு சீவலப்பேரி சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்வதாக கூறியதையும், ஆனால் அப்படி எந்த வித பூஜையும் செய்யாமல் மறந்து வந்ததும் தெரியவந்தது. உடனே தாங்கள் செய்த தவறை உணர்ந்து கொண்டனர். உடனே அங்கு சென்று பூஜை செய்ய போவதாக கூறினர். அப்போது சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி, பிரம்ம சக்தி, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் தோன்றி நாங்கள் உங்களுடன் இங்கே வந்து விட்டதாகவும், மயானம் அருகே தங்களுக்கு இருப்பிடம் போட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்ததாகவும், அதன்படி மயானம் அருகே சுடலைக்கு இருப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டது. மேலும் மாடு மயங்கி விழுந்த இடமான இப்போது கோயில் இருக்கும் இடத்தில் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயில் வந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் மயானம் அருகிலும் சுடலைக்கு இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், கோயில் கொடை விழாவுக்கு முன்பு மாயானத்தில் உள்ள சுடலை சுவாமிக்கு சிறப்பு பூஜை, மயானகுழியில் இளம் பன்றியை பலி கொடுத்த பிறகு கோவில் கொடை விழா நடக்கிறது. விழாவின் போது சுவாமி, யானையில் வீதி உலா வரும் போது பொது மக்களின் வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு அருள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குகின்றவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயிலுக்கு வந்து வேண்டி செல்வதாகவும், இதே போல் வெளியூர்களில் இருந்து வானங்களில் வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்வோர்களும் அதிகம் என்கின்றனர் சீவலப்பேரி ஸ்ரீ சுடலைமாடசுவாமியின் பக்தர்கள். மாட்டு பொங்கலில் சிறப்பு அபிஷேகம் இந்த கோவிலில் வெள்ளிகிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கலன்று சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago