ஊதியமில்லா தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணம்; தமிழக அரசின் முடிவு என்ன?

கொரோனா ஊரடங்கால் ஊதியமின்றி தவிக்கும் ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் முதல் அலை ஏற்பட்டதில் இருந்தே தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. வீட்டிலிருந்தே கல்வி கற்க முழு கட்டணத்தையும் ஏன் செலுத்த வேண்டும்.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் கல்வி கட்டணம் செலுத்துவதில் சலுகை காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பெற்றோர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளை மேலாண்மை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் தராமல் பள்ளி நிர்வாகங்கள் காலம் தாழ்த்தி வருகின்றன.

Related Post

மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழலில் எப்படி ஊதியம் வழங்குவது என ஆசிரியர்களை கட்டாய விடுப்பில் வைத்திருக்கின்றனர். இதனால் ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தினர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேறு பணிகளை தேடி அலையும் நிலை உருவாகியிருக்கிறது. குடும்ப செலவுகளுக்காக தடுமாறுகின்றனர். ஓராண்டாக ஊதியம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் தரப்பில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய தொகையை ஆசிரியர்களுக்கு தாமதமின்றி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago