கொரோனாவை பரப்பி விட்ட சீனா 100 வது இடத்தில்… நேற்று வெறும் 14 பேருக்கு மட்டுமே தொற்று..!

உலக நாடுகள் கொரோனாவின் உருமாறிய தொற்றால் அலறிக் கொண்டிருக்க சீனாவில் மட்டும் இந்த அளவிற்கு குறைந்தது…

கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையினால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஆனால், சீனாவில் கடந்த சில மாதங்களாக 20 க்கும் குறைவாகவே கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று அங்கு கொரோனா தொற்று வெறும் 14 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை  அங்கு இறப்பு 4500 மட்டுமே.

ஆனால், சீனாவில் 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு14 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால்,இதுவரை கொரோனா வைரஸ் சீனாவில் இருந்தே பரவியதாக கூறப்படுகிறது.

Related Post

கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்துதான் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் வவ்வாலிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக சீனா கூறியது. அதே சமயம் சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நேரில் ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்ததற்கான வலுவான ஆதாரங்கள் துவும் இல்லை என்று கூறிய உலக சுகாதார நிறுவனம், விலங்குகளிடமிருந்து  பரவியிருக்கலாம் என பொத்தாம் பொதுவாக அறிக்கை தந்தது.

உலக நாடுகள் கொரோனாவின் உருமாறிய தொற்றால் அலறிக் கொண்டிருக்க சீனாவில் மட்டும் இந்த அளவிற்கு குறைந்தது எப்படி என பல நாடுகள் ஆச்சர்யப்பட்டாலும், சில நாடுகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago