நீலகிரியில் 33. 6 மி. மீ. , மழை பதிவு: 6 இடங்களில் மரங்கள் விழுந்தது

ஊட்டி: நீலகிரியில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் 160 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. குன்னூரில் மட்டும் 6 இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரபி கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டவ்டே’ புயலாக உருவானது. இதனால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.இதனை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது.

அதன்படி, நீலகிரியில், நேற்று மாலை துவங்கிய பரவலான மழை இரவு முழுவதும் பெய்து வந்தது. அவ்வப்போதும் காற்றும் வீசியது. தற்போதும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றிரவு, ஊட்டி – கூடலூர் சாலையில், பைக்காரா பகுதியில் விழுந்த ராட்சத மரத்தை, தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதால், அங்கு, 160 பாதுகாப்பு முகாம்கள் திறக்கப்பட்டு, மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் பிற இடங்களிலும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையால் போதிய பாதுகாப்பு இல்லை எனில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு முகாம்களில் தங்க அந்தந்த பகுதி வருவாய் துறையினரை அணுக வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் மழை அளவு

இன்று காலை, 7:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் சராசரி மழை அளவாக 33.6 மி.மீ., பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, தேவாலா, 137, மி.மீ., கிண்ணக்கொரை, 100 மி.மீ., பந்தலூர், 56 மி.மீ., கெத்தை, 52 மி.மீ., மற்றும் 15க்கு மேற்பட்ட இடங்களில்,, 20 மி.மீ., மேல் மழை பதிவாகியுள்ளது.

6 இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு

Related Post

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை பர்லியார் முதல் மரப்பாலம் வரை 3 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது. தகவலின் பேரில், குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், முன்னணி தீயணைப்பாளர்கள் சேகர், முரளிதரன், தீயணைப்பாளர்கள் பிரபு, வெள்ளையன், பிரகாஷ், குமார் ஆகியோர் அங்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்ததால், பால் வாகனம் உள்ளிட்டவை காலதாமதமாக வந்தது.

குன்னூர் – கோத்தகிரி சாலையில் மூணு ரோடு அருகே விழுந்த மரத்தை இதே குழுவினர் அகற்றினர்.இதே போல ஊட்டி – குன்னூர் சாலை, ஜிம்கானா சாலையில் விழுந்த மரங்களை முன்ணணி தீயணைப்பாளர்கள் ஜெகதீஷ் சந்திரபோஸ், கண்ணன், தீயணைப்பாளர்கள் மதன், பர்குணன், ராமசந்திரன் அடங்கிய குழுவினர் அகற்றினர்.

25 தேசிய பேரிடர் மீட்பு படை வந்தனர்

மாவட்டத்தில், 283 பேரிடர் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. 42 மண்டல குழுகள் உட்பட அனைத்து துறையினர் ஒருங்கிணைந்து களத்தில் உள்ளனர். இது வரை, பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

கன மழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று, கோவையிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில், 25 பேர் ஊட்டி வந்தனர். மழை பாதிப்பை பொறுத்து அந்தந்த பகுதிக்கு பிரித்து அனுப்புகின்றனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago