இலக்கிய துறைக்கான 54-வது ஞானபீட விருது அறிவிப்பு..!பிரபல ஆங்கில நாவலாசிரியர் தேர்வு..!!

ஒவ்வோரு ஆண்டும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளில் சிறந்த எழுத்தாளருக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது.இந்த விருதினை பெறுவோர்க்கு 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தங்கம், செம்பு கலந்த பட்டயமும் அதனுடன் பாராட்டுப் பத்திரம் மட்டுமல்லாமல் பித்தளையால் செய்யப்பட்ட ஒரு கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த விருதானது 1961-ல் இந்தியாவில் நிறுவப்பட்டது.மேலும் இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்க்கு சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி அவர்களின் இலக்கிய படைப்பை கவுரவித்து வருகிறது.

இலக்கிய துறைக்கு என்றே வழங்கப்படும் இந்த விருது அந்த துறையில் சிறப்பாக செயலாற்றிய ஒருவர்களுக்கு அளிக்கப்படக்கூடிய மிக உயரிய விருதாகும்அவ்வாறு இந்தாண்டுக்கான ‘ஞானபீடம்’ விருது அமிதவ் கோஷ் என்கிற பிரபல ஆங்கில எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

54 வது ஞானபீடம் விருதினை பெறப்போகும் பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷ் (62) 1956-ம் ஆண்டில் மேற்குவங்கம் மாநில கொல்கத்தாவில் பிறந்தவர். ஆனால் இவர் தற்போது நியூயார்க்கில் மனைவி டெபோரா பேக்கர் உடன் வசித்து வருகிறார்.

Related Post

தனது படிப்பை டெல்லி முடித்த இவர் ஆக்ஸ்போர்டு மற்றும் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகங்களிலும் படித்துள்ளார்.மேலும் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஞானபீட விருதை தமிழில் பிரபல எழுத்தாளர்களான அமரர் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகிய இருவர் 1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஞானபீட விருதினை பெற்றனர்.மேலும் கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும் மற்றும் இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் ஞானபீட விருதைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago