12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை: நீட் தேர்வு ரத்து- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். 12-ம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படிப்புகளின் சேர்க்கை நடைபெறும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது, கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது. இருப்பினும், முற்றிலும் குறையவில்லை. இந்தச் சூழலில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை நடத்தினால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். அவருடைய அறிவிப்பைத் தொடர்ந்து, பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் 12-ம் வகுப்பு தேர்வை ரத்துசெய்வதாக அறிவித்தனர். அதேபோல, தமிழகத்திலும் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. இருப்பினும், தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு ஆர்வம் காட்டியது.

12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவத்துறையினர், கல்வியாளர்கள், அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்குப் பிறகு 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவருடைய அறிவிப்புக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘12-ம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான முக்கிய விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியாவில் தீவிர கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாது என்று 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Post

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்வது என்று நாங்களும் முடிவு செய்துள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்திலுள்ள கலை, அறிவியல், தொழிற்துறைப் படிப்புகளுக்கான சேர்க்கை அனுமதிக்கப்படும். மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மனதில்வைத்தும், பெரும்பாலான கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள் கருத்துகளைக் கருத்தில் கொண்டும் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் எந்தபடிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்பது மாணவர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்துக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அதனால், நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். சி.பி.எஸ்.இ மாணவர்களின் 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ததற்கான அதேகாரணங்கள் இதற்கும் பொருந்தும். நாங்கள் எப்போதும் வலியுறுத்திவருவதுபோல 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் ஒன்றின் அடிப்படையில் மட்டும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago