Categories
கல்வி & வேலை

தெற்கு ரயில்வேயில் 3,500-க்கும் அதிகமான அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள் – நாளை கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில், பல்வேறு அப்ரண்டிஸ் பயிற்சி பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:1. கார்பென்டர்2. எலக்ட்ரீசியன்3. ஃபிட்டர்4. மெசினிஸ்ட்5. பெயிண்டர்6. வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்த காலியிடங்கள் = 3,529

முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2019 (நாளை), மாலை: 05.00 மணி வரை

வயது வரம்பு: (01.12.19 அன்றுக்குள்) குறைந்தபட்சமாக 15 வயது முதல் அதிகபட்சமாக 22 / 24 வயது வரை பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் போன்றோர் கட்டணம்செலுத்த தேவையில்லை.2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் தவிர மற்றவர்களுக்கான கட்டணம்:ரூ.100

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை:ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:1. Freshers: முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால் குறைந்தபட்சமாக, 10, +2 வகுப்பில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. ITI: ஐடிஐ (ITI) படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று 50% மதிப்பெண்களில் தேர்ச்சியுடன் பயிற்சி சார்ந்த நேஷனல் ட்ரேடு சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்.

3. MLT: +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் பயின்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு: இன்ஜினியரிங் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

பயிற்சி காலம்: 1. ஐடிஐ படித்தவர்கள்: ஒரு வருடம் 2. முன் அனுபவம் இல்லாதவர்கள்: ஒரு வருடம் 3 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில், www.sr.indianrailways.gov.in – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு,1. http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/CW_PER_ACTAPP_Notification_2020.pdf

2. http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/CW_PONMALAI_ACTAPP_Notification_2020.pdf

3. http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/CW_POD_ACTAPP_Notification_2020.pdf – போன்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்.

View Web Edition: WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Reply