Categories
கல்வி & வேலை

3 ஆயிரம் கோடி வளர்ச்சி!

விளையாட்டுக்கள் வாயிலான ஆன்லைன் கற்றல் மற்றும் பயிற்சி முறை அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் 38 சதவீதம் வளர்ச்சி பெறும் என்றும், எதிர்காலங்களில் பெரும்பாலும் இந்த முறையின் வாயிலாகவே பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் மேம்படுத்தப்படும் என்றும் ஸ்கூல்குரு எஜுசர்வ் நிறுவனத்தின் சி.இ.ஓ., சாத்தனு ரூஜ் தெரிவித்துள்ளார்.’பணி வாயிலான கற்றல் என்பது பணியாளர்களுக்கு பெரும்பாலும் சலிப்பையே தரும் என்பதால், புதுவிதமான கற்றல் மற்றும் பயிற்சிக்கு குறிப்பாக கார்ப்ரேட் நிறுவனங்களால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.ஆன்லைன் வாயிலான பயிற்சி முறையும் படுவேகமாக வளர்ந்து வருகிறது.
இதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய கற்றல் முறை 3 ஆயிரம் கோடி அளவிற்கு வளர்ச்சி பெறும்’ என்று எதிர்பார்ப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply