Categories
கல்வி & வேலை

ஆயுர்வேதா படிப்பு

படிப்பு: பேச்சலர் ஆப் ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி (பி.ஏ.எம்.எஸ்.,) எனும் ஐந்தரை ஆண்டுகால படிப்பு (ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் உட்பட) நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.இப்படிப்பில், அனாடமி அண்ட் பிசியோலஜி, சம்ஸ்கிருதம், ஆயுர்வேதிக் டாக்சிகாலஜி, பார்மகாலஜி, பார்மசூட்டிக்ஸ், ஜெனரல் சர்ஜரி, ஈ.என்.டி., ஆப்தோமாலஜி, பஞ்சகர்மா, பீடியாட்ரிக்ஸ், கைனகாலஜி உட்பட பல்வேறு பாடங்கள் இடம்பெற்றுள்ளன.முதுநிலை படிப்புகள்:இளநிலை பட்டப்படிப்பிற்கு பிறகு, மூன்று ஆண்டு கால எம்.டி., படிப்பில் பொது மருத்துவம், பல் மருத்துவம், பஞ்சகர்மா, கைனகாலஜி, சர்ஜரி, ஆப்தோமாலஜி, ஈ.என்.டி., பீடியாட்ரிக்ஸ், சைக்யாட்ரி, பேதாலஜி, டாக்சிகாலஜி, பார்மகாலஜி, அல்கெமி, பார்மசி, பிரவெண்டிவ் மெடிசின், அனாடமி, பிசியோலஜி, அனஸ்தீசியா, ரேடியோலஜி உட்பட 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெறலாம்.முதுநிலை படிப்பிற்கு பிறகு, ஆயுர்வேத மருத்துவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ, பேராசிரியராகவோ செயல்படலாம்.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் மட்டுமின்றி, பல்வேறு முதுநிலை டிப்ளமா மற்றும் டிப்ளமா படிப்புகளும் ஆயுர்வேதா மருத்துவ துறையில் வழங்கப்படுகிறது.விபரங்களுக்கு: http://ayush.gov.in, www.ccimindia.org, www.ccras.nic.in

Leave a Reply