Categories
கல்வி & வேலை தலைப்புச்செய்திகள்

சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்; மதரசாக்களுக்கு உ.பி., அரசு உத்தரவு

லக்னோ: &’நாட்டின் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்&’ என, அனைத்து மதரசாக்களுக்கும், உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களுக்கு, மத ரீதியான பாடங்களை நடத்தும், 16,461 மதரசாக்கள் உள்ளன. இந்த மதரசாக்களுக்கு, உத்தர பிரதேச மதரசா கல்வி வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் சுதந்திர தினத்தை, அனைத்து மதரசாக்களும், வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும். தேசியக் கொடியை ஏற்றுவதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும்.சுதந்திரத்தின் வரலாறு, சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பான, அறிக்கை மற்றும் படங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதை அனைத்து மாவட்ட சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகங்கள் உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் சிறந்த முறையில் நிகழ்ச்சி நடத்திய மதரசாக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால், அரசின் இந்த உத்தரவுக்கு, மதரசா ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் விபரம்: நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, சுதந்திர தினத்தை நாங்கள் கொண்டாடி வருகிறோம். ஆனால், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்துதான், இது தொடர்பான உத்தரவு பிறப்பித்து வருகிறார்கள். அறிக்கையை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஆனால், அதற்கான ஆதாரம் கேட்டால், அதை அளிக்க முடியாது. இவ்வாறு, அந்த அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply