மெடி ஒலிம்பிக் போட்டி: சென்னை மாணவர் சாதனை

அம்பத்துார்: மாண்டனிக்ரோ நாட்டில் நடந்த, சர்வதேச, &’மெடி&’ ஒலிம்பிக் தடகள போட்டியில், சென்னை கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.செர்பியா நாட்டின் அருகே உள்ள, மாண்டனிக்ரோ நாட்டில், 40வது உலக மருத்துவம் மற்றும் சுகாதார துறையினருக்கான, மெடி ஒலிம்பிக் போட்டிகள், ஜூன் மாதம், 22 முதல், 29ம் தேதி வரை நடந்தன. அதில், 45க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, மருத்துவ துறை வீரர்கள், 3,500 பேர் பங்கேற்றனர். அதில், நீச்சல், ஓட்டப்போட்டி, துப்பாக்கி சுடுதல், ஜூடோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.அதில், சென்னை அம்பத்துார் அடுத்த பாடி, ராஜா தெருவை சேர்ந்த, ஈனாக் நியூட்டன் ஜோசப், 20, என்ற மருத்துவக் கல்லுாரி மாணவர் பங்கேற்றார்.
இந்தியாவில் இருந்து, உரிய விளையாட்டு விதிப்படி, தேர்வான ஒரே வீரர் ஆவார்.அவர், போரூர் ராமசந்திரா மருத்துவக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு, &’பிசியோ தெரபி&’ மருத்துவம் படித்து வருகிறார். அவர், பங்கேற்ற, 100 மீ., ஓட்டப்போட்டியை, 10:97 வினாடியிலும், 200 மீ., ஓட்டப்போட்டியை, 22:64 வினாடியிலும் கடந்து, தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். மேலும், அந்த போட்டியில் புதிய சாதனையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago