ஜூன் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட்’ எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட்’ தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆரம்பக் கல்வி வகுப்புகள் வரையும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும். இந்நிலையில் நிகழாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி, காலிப் பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Post
Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago