Categories
சமையல்

கருப்பு கொண்டைக் கடலை குழம்பு | karuppu kadalai kulambu recipe

தேவையானவைகருப்பு கொண்டைக் கடலை – 150 கிராம்.வெங்காயம் – 1.தக்காளி – 2.மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்.புளி – தேவைக்கு.தேங்காய் துருவல் – 1 ஸ்பூன்.முந்திரி – 2.கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு.காய்ந்த மிளகாய் – 2.உப்பு, எண்ணெய், கொத்தமல்லி – தேவைக்கு. செய்முறை:கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கவும்.பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை விடவும்.5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய்த் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Reply