Categories
சமையல்

கேழ்வரகு இனிப்பு ரொட்டி

என்னென்ன தேவை? கேழ்வரகு மாவு – 1 கப், அவரைப்பருப்பு – 1/4 கப், தேங்காய்த்துருவல், வெல்லப் பொடி – தலா 1 கப், எள்ளுப் பொடி – 2 டீஸ்பூன், சுக்கு தூள், சோம்பு தூள் – தலா 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது? அவரைப் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து அடைகளாக சுட்டு சிறு சிறு துண்டுகள் செய்து கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். அதில் கேழ்வரகு அடை துண்டுகள், அவரைப் பருப்பு, வெல்லப்பொடி, எள்ளுப்பொடி, சுக்கு தூள், சோம்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

Leave a Reply