Categories
சமையல்

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி??

கேழ்வரகு புட்டு மிகவும் சத்தானது மட்டுமின்றி, சுவையாகவும் இருக்கும். இப்போது அந்த சத்தான கேழ்வரகு புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

 

தேவையானப் பொருட்கள் :

 

கேழ்வரகு மாவு – 1 கப்

நாட்டு சர்க்கரை – 1/4 கப் அல்லது தேவைக்கேற்றவாறு

தேங்காய்த்துருவல் – 1/2 கப்

ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

நெய் – 2 முதல் 3 டீஸ்பூன் வரை

உப்பு – ஓரிரண்டு சிட்டிகை

 

செய்முறை :

* கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.

 

* பிசறி வைத்துள்ள கேழ்வரகு மாவை ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

 

* வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

 

* பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன் நாட்டு சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Leave a Reply