Categories: சமையல்

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சிக்கன் – 500 கிராம், ஏலக்காய் -2, கிராம்பு -2, பட்டை -2. அன்னாசி பூ-2, பிரிஞ்சி இலை – 2, சோம்பு -1 டீஸ்பூன், தயிர்-1/2 கப், தேங்காய்ப் பால்- 2 கப் (கெட்டி), கொத்தமல்லித்தழை-1 கப், புதினா- 1 கப், எலுமிச்சைச் சாறு-2 டீஸ்பூன்.

Related Post

செய்முறை: அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். சிக்கனை தயிரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
அடிகனமான அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தயிரில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் பாதியளவு மல்லி, புதினா இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு 1 கப் தண்ணீர் மற்றும் 2 கப் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் அரைமணி நேரம் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது எலுமிச்சைச் சாறு கலந்து மேலே மீதமுள்ள கொத்தமல்லி புதினா இலைகளை தூவி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி தட்டை வைத்து மூடி குறைந்த தீயில் வேகவிடவும். பத்து நிமிடத்திற்கு பிறகு தோசை கல்லை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி இந்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும். பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரத்திலே திறந்து மெதுவாக கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். வெங்காய பச்சடி முட்டை மற்றும் சிக்கன் கிரேவி உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். குக்கர் என்றால் அனைத்தையும் வதக்கி அரிசி சேர்த்து மூடி வைத்து 1 விசில் வைத்தால் போதும்.

Share

Recent Posts

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago

கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று…

1 year ago