Categories: சமையல்

பாலக் சிக்கன்

தேவையானவை: பாலக்கீரை – 1 கட்டு, சிக்கன் – 1/2 கிலோ, வெங்காயம் – 300 கிராம், தக்காளி – 200 கிராம், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,தனியாத்தூள் – 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, இஞ்சி, பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, பச்சைமிளகாய் – 3.

Related Post

செய்முறை: பாலக் கீரையை சுத்தம் செய்து வெந்நீரில் 1 நிமிடம் சேர்த்து எடுத்து ஆறவைத்து பச்சைமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக சுத்தம் செய்து அரைவேக்காடாக வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலம், கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் அதில் பாலக் விழுது, உப்பு சேர்க்கவும். இத்துடன் சுத்தம் செய்து அரைவேக்காடாக வேகவைத்த சிக்கனையும் சேர்த்து வதக்கவும். சிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago