ஒருவரின் வயிற்றின் வழியே அவரின் மனதை அடையலாம் என்று பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்வார்கள்! இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை நான் அனுபவத்தில் அறிந்து கொண்டுள்ளேன்! நாம் செய்யும் சமையல் வெற்றி பெறுவதற்கு, ஒரு மேஜைக்கரண்டி பொறுமை, ஒரு மேஜைக்கரண்டி கவனம், ஒரு தேக்கரண்டி புதுமை, இவை மட்டும் போதும்! எவர் மனதையும் எளிதில் வென்றுவிடலாம்!
இங்கே நம் சமையல் ஜெயிக்க சில குறிப்புகளை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்! (இந்தக் குறிப்புகள் பலருக்குத் தெரிந்திருக்கலாம்! இவையெல்லாம் புதிதாக சமைக்க ஆரம்பித்து இருப்பவர்களுக்கு என்று நினைத்து விட்டு விடுங்கள்!)
1. புளிபேஸ்ட் / Tamarind Paste:
அலுவலகம் செல்லும் பெண்களுக்கு, காலை நேர அவசரத்தில் புளியை ஊற வைத்து சாறு எடுக்க பொறுமை இருப்பதில்லை என்பதால் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் புளி பேஸ்ட்டை வாங்கிப் பயன் படுத்துகிறார்கள்! ஆனால் அதில் க்ளாஸ் 2 ப்ரிசர்வேடிவ்ஸ் (class 2 preservatives) சேர்த்திருப்பதால் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்! வீட்டிலேயே புளி பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொண்டால் பாதுகாப்பாகவும் இருக்கும்! உடல் நலனும் கெடாது!
அரைக் கிலோ புளியை வாங்கி கொட்டை நீக்கி, கோது குப்பை இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்! அதை நன்றாக மூழ்கும்படி தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி நன்றாகக் கொதிக்க வைத்து பின் நன்றாக ஆற வைக்கவும்! மூன்று மணி நேரம் ஊறிய பின்னர் அதை மிக்சியில் குழைவாக அரைத்து வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும்!
அளவாக நீர் சேர்த்து கெட்டியான கரைசலாக வடிகட்டிக் கொள்ள வேண்டும்!
வடிகட்டிய புளிக் கரைசலை அடி கனமான ஆழமான வாயகன்ற பாத்திரத்தில் (பெரிய குக்கர் சரியாக இருக்கும்) இட்டு அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்! இது கொதிக்கும் போது வெளியே தெறிக்கும்! அதனால் மூடி வைத்து கொதி விடவும்! நடு நடுவே கிளற வேண்டும்! இல்லையென்றால் அடி பிடித்துக் கொள்ளும்!
45 நிமிடங்கள் கொதித்து நன்கு கெட்டியாக வரும்போது கரண்டியில் எடுத்தால் திக்கான பேஸ்ட்டாகவும், கரண்டியைக் கவிழ்த்தால் கரண்டியில் ஒட்டாமலும் இருந்தால் இதுதான் சரியான பதம்! இப்போது அடுப்பை அணைத்து விடலாம்! இதை நன்றாக ஆற வைக்கவும்!
நன்றாக ஆறிய புளி பேஸ்டை ஈரமில்லாத நல்ல சுத்தமான காற்றுப் புகாத கண்ணாடிப் புட்டியில் கை படாமல் சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்! ஆறு மாதம் வரை கெடாது! அரை கிலோ புளியிலிருந்து ஏறக்குறைய 800ml புளி பேஸ்ட் கிடைக்கும்! இதனை சாம்பார், குழம்பு, ரசம், கூட்டு, சட்னி, துவையல், தொக்கு என எது செய்யும் போதும் பயன் படுத்தலாம்!
முதலில் செய்வதற்குதான் கொஞ்சம் நேரம் எடுக்கும்! செய்து வைத்துக் கொண்ட பின் நிமிடமாய் நம் சமையலை முடிப்பதற்கு பெரிதும் கை கொடுக்கும்!
இன்னும், Bisibelebath powder, Briyani Powder, Green Chutney, Sweet Chutney, பாேன்ற பலவற்றை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதற்கு குறிப்புகள் வந்து காெண்டே இருக்கு நண்பர்களே!
By – Annapurani Dhandapani
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…