Categories: சமையல்

தீபாவளியும் ரிப்பன் பக்கோடாவும்.

ரிப்பன் பக்கோடா.

தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கார பக்ஷனம் ரிப்பன் பக்கோடா. காண்பதற்கு ரிப்பன்/நாடா போன்று தோற்றம் அளிப்பதால் இது ரிப்பன் பக்கோடா / ரிப்பன் முறுக்கு / நாடா தேன்குழல் அல்லது ஓலை பக்கோடா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தொடர்ந்து இனிப்புகளை செய்தால் அது திகட்டிவிடும். எனவே தீபாவளி பண்டிகைக்காக இந்த ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

 400 கிராம் – கடலை மாவு

 200 கிராம் – அரிசி மாவு

 1 ½ தேக்கரண்டி மிளகாய் தூள்

 1 சிட்டிகை சமையல் சோடா(Baking soda)

 2 சிட்டிகை பெருங்காயத்தூள்

 2 மேஜைக்கரண்டி சூடான எண்ணெய் அல்லது 100 கிராம் வெண்ணெய்.

 உப்பு – தேவைக்கேற்ப

 எண்ணெய் – தேவைக்கேற்ப

Related Post

செய்முறை விளக்கம்

1. கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சலித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.( மாவில் கட்டிகள் இருந்தால் அது ரிப்பன் அச்சில் மாட்டிக்கொள்ளும் அப்பொழுது ரிப்பன் சரியாக பிழிய வராது எனவே சளிப்பது அவசியம்).

2. அதில் மிளகாய்த்தூள், பெருங்காய்த்தூள், வெண்ணை அல்லது நெய், உப்பு, சமயல் சோடா ,சேர்த்து கலக்கவும்.பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும்.(புதிதாகச் செய்பவர்கள் ஒரு அரை டம்ளர் தண்ணீரில் மிளகாய் தூள் உப்பு பெருங்காயத் தூள் சமாயல் சோடா அனைத்தையும் போட்டு அதனை மாவில் சேர்த்தால் உப்பு சமமாகப் பரவி இருக்கும்). மாவின் பதம் மிகவும் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் கெட்டியாகவும் பிசையவும்.

3.ரிப்பன் பக்கோடா செய்யும் அச்சின் உள்ளே கொஞ்சம் எண்ணெய் தடவி, ரிப்பன் பக்கோடா தகடை அடியில் பொருத்திக் கொள்ளவும். இதன் உள்ளே மாவை நிரப்பிக் கொள்ளவும்.( பிசைந்த மாவை எப்பொழுதும் ஒரு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் மாவு காய்ந்துவிடும்.) எண்ணெயில் பிழியும் பொழுது ஒன்றின்மேல் ஒன்றாக பிழிந்தால் அது வேகாது ,எனவே ஒன்றொன்றாக செய்ய வேண்டும். அதே போல் பிசைந்து வைத்த மாவை நேரம் கழித்து செய்தால் பக்கோடா சிவந்த நிறமாக மாறிவிடும் எனவே உடனே செய்து விடவும் .

4.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானவுடன் அச்சில் இருக்கும் மாவை பிழியவும்,பின்னர் ஓசை அடங்கும் வரை காத்திருந்து அதனை பொன்னிறமாக வரும் வரைக்கும் காத்திருக்கவும் பிறகுஒரு கரண்டியை கொண்டு அதனை வடித்தட்டில் எடுத்து வைக்கவும். இதை ஒரு டிஷ்யூவில் போட்டால், அது அளவிற்கு ஜாஸ்தியாக இருக்கும் எண்ணெயை ஈர்த்துக்கொள்ளும்.

5.பின்னர் இதை நன்கு ஆறவிடவும். பின்னர் அதனை டப்பாவில் போட்டு வைக்கவும். இதோ நூறும் உருவான சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.ஒரு கப் சூடான பில்டர் காபியுடன் ருசித்தால் சுவை அலாதியாக இருக்கும்.

இந்த ரிப்பன் பக்கோடா செய்வது மிகவும் எளிது இதனை பண்டிகை நாட்களில் தவிரவும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் வைக்கும் ஒரு உணவாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழிகளே…

Disclaimer: The opinions expressed in this post are the personal views of the author. They do not necessarily reflect the views of Momspresso.com. Any omissions or errors are the author’s and Momspresso does not assume any liability or responsibility for them.

By – Sowmya Anand

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago