Categories
சமையல் தலைப்புச்செய்திகள்

கடலைப்பருப்பு போளி.

கடலைப்பருப்பு போளி: தேவையான பொருட்கள் :

1.மைதா மாவு – 2 கப்

2.கடலை பருப்பு – 1 கப்

3.வெல்லம் – 1 கப்

4.தேங்காய் – 1/2 கப்

5.ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

6.நல்லெண்ணெய் – சிறிதளவு

7.உப்பு – ஒரு சிட்டிகை

8.நெய் – தேவையான அளவு

9.தண்ணீர் – தேவையான அளவு

10. சமையல் சோடா – ஒரு சிட்டிகை

11. மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை

செய்முறை விளக்கம் :

மேல் மாவு செய்வதற்கு:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும், அதில் மைதா மாவு, ஒரு சிட்டிகை சமையல் சோடா, 2 சிட்டிகை உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசையவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவை ஓர் மெல்லிய துணியில் வைத்து அதனை மூடி வைக்கவும்.(நான் இரண்டு மணி நேரம் அவ்வாறு ஊற வைத்தேன்).அப்பொழுது தான் போளியின் மாவு நன்றாக சாஃப்ட்டாக இருக்கும்.

பருப்பு பூரணம் செய்யும் முறை:

1. கடலைப் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீருடன் சேர்த்து ஒரு அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும் பின்னர் அதனை பிரஷர் குக்கரில் போட்டு வேக வைக்கவும். 3_4 விசில் விட்டு இறக்கிவும். 2. அதன் பிறகு தேங்காய் கீற்றுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளலாம் அல்லது தேங்காய் துருவலில் துருவிக் கொள்ளவும்.

3. இப்பொழுது கடலைப்பருப்பில் இருக்கும் அதிகப்படியான நீரை வடிகட்டி விடவும். பின்னர் அதனுடன் ஏலக்காய் பொடி வெல்லம் இவற்றை சேர்த்து பெரிய மிக்சர் ஜாரில்(large mixie jar) போட்டு அரைத்துக் கொள்ளவும்.

4. ஒரு non stick pan அல்லது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து கிளறவும்.

5. வெல்லம் நன்கு கரைந்து ஒன்று சேர்ந்ததும், நன்றாக கிளறி இறக்கி வைத்து ஆற வைக்கவும் அதனை அடுப்பிலிருந்து இறக்கவும்.

6. பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு பூரணத்தையும் சிறு உருண்டைகளாக உருட்டவும்.

7. அதன் மேல் பூரண உருண்டையை நடுவில் வைத்து, நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும்.

8. பின் மெல்லிய கவரை எடுத்து,(அதனை மேலே ,கீழே இருபக்கங்களிலும் கட் செய்து விடவும்.அப்போதுதான் நடுவில் மாவை வைத்து மூட முடியும்)அதில் நல்லெண்ணெயை தடவி, மைதா உருண்டையை வைத்து அதன் மேல் உருண்டையாக இருக்கும் ஒரு பாத்திரத்திலோ அல்லது கிண்ணத்தை வைத்து வட்டமாக செய்யவும்.(கைகளால் செய்தால் சில சமயம் சமமாக வராது கையிலும் ஒட்டும், எனவே இவ்வாறு செய்தால் சமமான உருண்டை வடிவில் வரும் பின்னர் சப்பாத்தி செய்யும் குழவியால் அதனை லேசாக பெரியதாக இட்டுக் கொண்டும்.

9. non stick tawa அடுப்பில் வைத்து நெய்யைத் தடவி போளியைப் போடவும். இவ்வாறு இரு பக்கமும் நெய்யைத் தடவி, கேஸை ஸ்டவ்வை சிம்மில் வைத்து( low flame) வைத்து வேக வைத்து எடுக்கவும்.

10. சுவையான பருப்பு போளி ரெடி.

11. போளியின் மேல் ஒரு அரை தேக்கரண்டி நெய் விட்டு சாப்பிட்டால் சுவை இன்னும் அலாதியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனை குழந்தைகளுக்கு (short break tiffin) ஆகவும் கொடுக்கலாம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

Disclaimer: The opinions expressed in this post are the personal views of the author. They do not necessarily reflect the views of Momspresso.com. Any omissions or errors are the author’s and Momspresso does not assume any liability or responsibility for them.

By – Sowmya Anand

Leave a Reply