Categories
சமையல்

சதுரகிரி- அகத்தேடலின் பயணம்…

சதுரகிரி… சதுர் நான்கு…கிரி மலை…நான்கு மலைகளால் நிறைந்தது என்பதே பொருள்…எங்க இருக்குனு சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம்…தெரியாதவங்களுக்கு கடைசியில சொல்லுறேன்… சதுரகிரி— என் கனவுங்க அங்கப்போணும்னு இந்த கட்டுரை பெரும்பாலும் என் சொந்த அனுபவத்தில் அப்புறம் கொஞ்சம் தீட்சை பெற்று பல வருடமாய் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கும் சிலரிடம் கேட்டுப்பெற்று எழுதியது தான்…
தாணிப்பாறையில இருந்து புறப்பட்டது எங்க பயணம்…முதலில நடக்கிறப்போ நிறைய படிக்கட்டுகளாகத்தான் வரும்…இப்படியே பாதை இருந்தா நல்லா இருக்கும்லனு தோணும்…ஆனா அப்படிலாம் இல்லீங்க…போக போக பாதை கடினமாகும்…நாங்க போயிட்டு இருக்கப்போவே ஒருத்தவங்க சொன்னாங்க…சங்கிலிப்பாறை போறப்போ கவனமா போங்க…அதுக்கடுத்து கொஞ்சத்துரத்துல வழுக்குப்பாறை வரும்னு…அவங்க சொன்னமாதிரியே சங்கிலிப்பாறை அவ்வளவு பயமில்லீங்க…இருந்தாலும் கொஞ்சம் கவனம் வேணும்… அடுத்ததா வழுக்குப்பாறை…அதுதான் கொஞ்சம் பயம் பிடிச்சுட்டுப்போக கூட தடுப்பு எதுவும் கிடையாது…பாறையை ஒட்டினாப்ல பிடிச்சிட்டு தான் போணும்…கொஞ்சம் கீழ எட்டிப்பாத்தீங்கனா அதளபாதாளாமா இருக்கும்…பாறைகளிலேயே குட்டி குட்டியா படிக்கட்டு வெட்டிருக்காங்க…ஆனால் தொடர்ச்சியா கிடையாது…கவனமா போங்க… அடுத்து கரடுமுரடா நிறைய பாதைகள் உண்டு…அதுல ஒண்ணு படிக்கட்டுப்பாறை…ஏறுறப்போ பாத்தீங்கணா யப்பா சத்தியமா சொல்றேனுங்க அவ்வளவு பயம்…ஏனுனா உங்களுக்கு கைப்பிடிலாம் கிடையாது ஒரு கயிறு கூட பிடிக்க கிடையாது…வர்ற கூட்டமும் வரும்…போறவங்களும் வருவாங்க பாத்துவச்சிப் போணும்…கல்லும் பாறையுமாத்தாங்க இருக்கும் போற வழிலாம்… ஆனா சுவாரசியமான சில விஷயங்களும் இருக்குதுங்க…நாங்க போயிருந்தப்போ அந்தக்கோவிலயே பிரசித்திப்பெற்ற திரு நாளுக்கு முந்தைய நாள்…அதுனால கூட்டமும் கூட போலீஸ் , மலை பகுதிங்கிறதால தீயணைப்பு படையும் நிறைய இருந்தாங்க… போற வழியிலலாம் சமயங்களில் சிலரிட்ட இன்னும் எவ்ளோ தூரம்னு கேட்கிறப்போ இன்னும் ஒரு 10நிமிசம் தாங்கனு சொன்னாங்க…அவ்ளோ பக்கத்தில வந்துட்டோமானு உற்சாகமா போக ஆரம்பிச்சோம்…10நிமிசத்துக்கு மேலயே ஆச்சு இன்னும் கோவில் வரல…அப்புறம் இன்னும் சிலர்ட்ட கேட்டப்போவும் அதே பதில் தான்…காரணம் புரியல…சரி போவோம் அப்புறம் பாத்துக்கலாம் கோவில் வரப்போ வரட்டும் நாம நடந்துட்டே இருப்போம்னு… அப்புறம் ரெட்டை லிங்கம் சன்னிதி வந்துச்சு…அதுக்கடுத்து பார்த்தது வருசநாடு வழி இந்த வழியா வரவங்க இந்த இடத்துல ஜாயிண்ட் ஆவாங்க…அப்புறமா அங்க இருந்த போலீஸார்க்கிட்ட சார் இந்த வழி எத்தனை தூரம்ங்கனு கேட்டப்போ இது 10கிமீ தான்மானு சொல்லிட்டாப்டி…ஒஹோனு சொல்லிட்டே அந்த வழியை பார்த்துட்டே வந்தேன்… நான் போனப்புறம் நான் கேட்ட அந்த போலீஸ் அய்யாக்கிட்ட கூட இருக்கும் சகத்தோழர் என்ன இப்படி சொல்லுறீங்கனு கேட்டாப்டி…இல்லப்பா நாம அப்படி சொன்னாதான் ஆர்வமா நடப்பாங்க நாம அதிகமா சொன்னா அவங்க மலைப்பா நினைப்பாங்க…அப்புறம் நடக்க சிரமப்படுவாங்க… இதப்பார்த்துட்டே இருந்த எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு…அப்போ தான் வர வழியில எல்லோரும் சொல்லிவச்சாப்ல பக்கத்திலதான்மா இன்னும் கொஞ்சம் தூரம் ஒரு பத்து நிமிசம்தானு சொன்னதோட அர்த்தம் புரிஞ்சுது…அழகான மனிதர்கள்

அடுத்து பேச்சியம்மன் கோவில் போற வழி…அந்த பாதை ரொம்ப குறுகிய பாதைங்க…போலீஸ் இரு பக்கமும் கயிறு கட்டி வரிசையாய் அனுப்பினாங்க…ஏற சிரமப்படுற வயசானவங்களுக்கு ஏறதுக்கு நல்லாவே உதவி பண்ணாங்க…போலீஸ் தீயணைப்பு படை மட்டுமல்ல…நிறைய அன்பு நிறைந்த சாதாரண மனிதர்களின் கேட்காமலே நிறைய உதவி பண்ணாங்க…மனிதம் மீதமிருக்கிறது நிறையவே…கற்றுக்கொண்டேன் தெளிவாகவே போறவழியில எல்லாம் மலையோட அழகை ரசிச்சிட்டே போலாம்ங்க…இதமான தென்றல் வெயில் இல்லை…அழகான தட்பவெப்பநிலை… அப்புறம் பிலாவடி கருப்பசாமிங்க…அதுக்கப்புறம் கொஞ்சம் தூரம் போயிட்டே இருந்தவுடனே சதுரகிரி சுந்தரமகாலிங்கமனு போர்டு போட்டிருந்துச்சு…கூட்டம் இருந்ததால ஒரு சின்ன வரிசை அப்புறமா சாமி தெரிஞ்சிச்சு…அங்ககூட கடவுளை வணங்காமல் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அரிய உள்ளங்கள் போலீசின் அன்பான வார்த்தைகளுக்கு (!)உள்ளானர்…சாமி இருக்கேங்க சுயம்பா தோன்றியவர்ங்க…சிவப்பெருமான் மேல ஒரு கலசத்தில தண்ணி நிரம்பியிருக்கும் அதுல இருந்து தண்ணி சாமி மேல சொட்டிட்டே இருக்கிறமாதிரி வச்சுருக்காங்க…பாத்துட்டே இருக்கலாம் அவ்வளவு அற்புதம்…விழிகள் கலங்குகின்றது…பக்தி மிகுதியில் யப்பா உன்னய பாத்துட்டேன் ஒரு வழியா நினைக்கிறப்போ நெகிழ்ந்து ததும்புகிறது உள்ளம்…காதலாய்,கருணையாய்,பக்தியாய் அவரை நோக்கும் நொடியெல்லாம் அட வார்த்தையில் வடிக்க முடியவில்லை என்னால்…இந்த கட்டுரையின் முகப்பில் உள்ள படம்தாங்க சுந்தரமகாலிங்கம் … இது மட்டும்தாங்க தோணுச்சு…சாமி பாத்து முடிச்சப்புறம்… கனவுகள் நிறைவேறும் தருணமெல்லாம் விழிநீரை சிறையெடுத்துக்கொள்கிறது…. கண்ணீராய்…காதலாய்…பக்தியாய் என் அத்துனையுமாய்… ஒண்ணு சொல்லிக்கிடுறேன் நீங்க ஏறுறப்போ மலைப்பா இருந்துச்சு வைங்க…கைகுழந்தையை தூக்கிகிட்டு மலையேறுறவங்க…ரொம்ப வயசான மக்கள்…அப்புறம் இன்னொரு விசயம் மேல அன்னதானத்துக்கு தேவையான எல்லாமே வந்து தோளில சுமந்துட்டுதான் கொண்டு போவாங்க எவ்ளோ சிரமம் கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…அவங்கள நீங்கள் கொஞ்சம் யோசிச்சீங்கணா உங்களுக்கு அவ்வளவு சிரமம் தெரியாது…ஆச்சயரித்துலேயே நடந்துடலாம்…அவங்களுக்குலாம் ஒரு பெரிய சல்யூடிங்க…அதனால தான் சாப்பாட வீணாக்காம சாப்பிடுங்கனு சொல்லிட்டே இருப்பாங்க…அவங்க எவ்வளவு சிரமப்பட்டு மேல எல்லாம் கொண்டு வந்து சமைக்கிறாங்கனு யோசிக்கிறவங்க வீணாக்க யோசிப்பாங்க ரொம்பவே… அப்புறம் மேல சந்தன மகாலிங்கம் கோவில் சுந்தரமகாலிங்கம் சன்னிதியில இருந்து ஒரு 20-25படிக்கட்டு அதுக்கப்புறம் சமதளம் அப்புறம் ஒரு 150படிக்கட்டு அவ்ளோதான் சந்தனமகாலிங்கம்…அங்கயே சித்தர்கள் சன்னிதி இருக்கு அம்மன் இருக்கு…எல்லாத்தையும் பாத்துட்டு கீழ இறங்க ஆறம்பிக்கிறப்போ ஒரு மனத்தெளிவு,மன அமைதி,ஆசைகள் அற்ற நிலை வரும் பாருங்க அதுக்கு ஈடு இணையே இல்லை…அந்த உணர்வு நாம போயிட்டு வந்தப்புறவும் பல நாட்கள் நீடிக்கும்…அதை உணரதுக்காகவே எத்தனை தடவை வேணாலும் போலாம்ங்க…ஆனா எந்த கோவில்லா இருந்தாலும் நாம நினைச்சாலாம் போயிட முடியாது அந்த கடவுள் நினைக்கணும்னு சொல்லுவாங்க…அந்த வார்த்தை எந்த கடவுளுக்கு பொருந்துதோ இல்லையோ இக்கடவுளுக்கு நூறு சதம் பொருந்தும் இந்த கட்டுரை கூட எடுத்துக்கோங்க நான் எழுத ஆரம்பிச்சது எப்பவோ ஆனா இன்னைக்குத்தான் முடிக்கணும்னு இருக்கு…என்னடா ரொம்பவே Superstitious ஊக்குவிக்கிறேனோனுலாம் நினைக்காதீங்க…ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும்…சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்கலாம் ஆனா கடவுள் நம்பிக்கை இருக்கவங்கள அவங்க விமர்சிக்கிறது தவறு…உங்கள் நாத்தீகத்தை அவங்க மதிக்கிறப்போ நீங்களும் ஆத்திகத்தை மதிப்பதே நலம்…முடிந்தவரை அவர்களை விமர்சிப்பதையாவது தவிர்க்கலாமே… நான் சொன்னேனுங்கள சங்கிலிப்பாறை ஒண்ணும் அவ்ளோ பயமில்லையேனு இறங்கிறப்போ இருக்கே கொஞ்சம் ஸ்லிப் ஆச்சுனா உருண்டு விழ வேண்டியதுதான் அந்த அளவுக்கு பயத்திற்கு கொண்டு சென்றது…இது முதல் முறை சென்ற எனது அனுபவம் ஒரு வேளை நிறைய தடவை போன அந்த அளவுக்கு பயம் இருக்காதுனு நினைக்கிறேனுங்க…இறங்கிறப்போ இதமான மெலிதான மழையும் சேர்ந்து எங்கள் பயணத்தை அழகான முறையில் மேலும் வரத்தூண்டியப்படியே பயணம் செய்ய வச்சது… இங்க இன்னும் பார்க்க நிறைய இடம் இருக்குங்க கோரக்கர் குகை,தவசிப்பாறை,வெள்ளை விநாயகர், பெரிய மகாலிங்கம் அப்புறம் இன்னும் மலைக்கு மேல சில இடங்கள்… இதுல தவசிப்பாறைக்குலாம் இப்போ விடுறதில்லைங்க…ஏன்னா சதுரகிரியில 2015ல ஒரு பெருவெள்ளம் வந்துச்சு…அதுல இருந்து போறதுக்கு நிறைய கட்டுப்பாடுகள்…மாசத்தில சிவராத்திரி, பிரதோசம்,பெளர்ணமி, அமாவாசை,அப்புறம் முக்கியமான திருவிழா நாட்கள் அப்போ மட்டும்தாங்க அங்க அனுமதி…மற்ற நாட்களில போகமுடியாது…அப்புறம் பிளாஸ்டிக் பைகள் மேல் கொண்டு போறதுக்கு அனுமதியில்லை கீழயே துணிப்பைகள் கொடுத்து அனுபுறாங்க பிளாஸ்டிக் பைகள் கொண்டு வந்திருந்தா அதை வாங்கிவச்சுட்டு… எங்க இருக்குனு தெரியாதவங்களுக்கு சொல்லிறேனுங்க… திருவில்லிபுத்தூருக்கு அடுத்து வத்திராயிருப்பு என்ற ஊரில் இறங்கி தாணிப்பாறை என்ற இடத்தில் இறங்கி அங்க இருந்து சதுரகிரி பாதைக்கு சுமார் 7கிமீ மலைக்கு மேல நடக்கணும்… மொத்தம் மூணு வழிகள் இருக்குங்க மலை ஏறதுக்கு…தாணிப்பாறை…வருச நாடு…சாப்டூர் வழி… இதுல கொஞ்சம் பரவாயில்லாம சுலபமா போயிடலாம் அப்படினா அது தாணிப்பாறை பாதை தான்…அது தான் பாதுகாப்பான பாதையும் கூட… வருச நாடு பாதை பெரும்பாலும் தேனி,உசிலம்பட்டி, மதுரைக்காராங்க உபயோகிக்கிறாங்க…இங்க என்னனா வழி ரொம்ப செங்குத்தாக இருக்கும்…ஏற ரொம்ப கடினம் ஆனா இறங்குவது கொஞ்சம் எளிது…இந்த பாதை மொத்தம் ஏறதுக்கு மட்டும் 13.5கிமீங்க… அடுத்ததா சாப்டூர் பாதை…இது எப்படின்னா சந்தன மகாலிங்கத்துக்குப் பின்புறமா இருந்து வருது…இங்கு விலங்குகள் நடமாட்டம் அதிகம்…அதிகமா இங்க நிறைய பேரு வரதில்லை…அப்புறமா பேரையூர், அருப்புக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் இங்க வராங்க…இது கிமீ கொஞ்சம் கம்மிதாங்க ஆனாலும் கோவிலுக்குப்பின்புறமா வந்து கோவிலை வழிப்பட வேண்டி இருக்கதாலும் இது அதிகமா உபயோகிக்க யோசிக்காங்க… அவ்வளவு தாங்க…பொறுமையா படிச்ச அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி…எல்லோரும் முடிஞ்சா சதுரகிரி மகாலிங்கம் போயிட்டு வாங்க… நமச்சிவாய வாழ்க…நாதன் தாள் வாழ்க…

By – RajiPrema s

Leave a Reply