Categories
சமையல்

முருங்கைப்பூ ராகி மிக்ஸ் பக்கோடா

தேவையான பொருட்கள்: ராகி மாவு – 200 கிராம், முருங்கைப்பூ – 50 கிராம் , சின்ன வெங்காயம் – 100 கிராம், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கடலை எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, வரமிளகாய்தூள் – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு,மல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய முருங்கைப்பூ, சின்ன வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, வர மிளகாய்தூள், சோம்பு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து மாவை உதிரியாய் பிசைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும், வெங்காய பக்கோடா போல் உதிரி உதிரியாக பொன்னிறமாக பொரிக்கவும். குறிப்பு : ராகியில் இரும்புச்சத்து, நார்சத்து, விட்டமின் டி, கால்சியம் மற்றும் அமினோ அமிலம் நிறைந்துள்ளது.

Leave a Reply