Categories
சமையல்

ஓட்ஸ் இனிப்பு பணியாரம்

என்னென்ன தேவை? ஓட்ஸ் – 2 கப், ரவை – 1/4 கப்,மைதா – 3 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – 1 கப், சுக்குப்பொடி, ஏலப்பொடி – தலா 1/4 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? ஓட்ஸை சிறிது தண்ணீரில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் ரவை, மைதா, வெல்லம், சுக்குப்பொடி, ஏலப்பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

Leave a Reply