Categories
சினிமா

விராட் கோஹ்லியினால் ஆஸ்திரேலியா தொடரில் சதம் அடிக்க இயலாது – பேட் கம்மின்ஸ் பேட்டி

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கின்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறுகையில், என்னுடைய தைரியமான உறுதியான கணிப்பு என்னவென்றால், இந்த முறை விராட் கோஹ்லியினால் ஆண்டு இறுதியில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ஒரு சதம் கூட அடிக்க முடியாது என்பது தான். அவர்களை எதிர்கொண்டு துவம்சம் செய்ய ஆயத்தம் ஆகி வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோஹ்லி 2014 – 2015 சீசனில் 4 சதங்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் வருகின்ற ஆஸ்திரேலியா தொடரில் சதம் அடிப்பாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply