Categories
சினிமா

சன்னி லியோனின் வீரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: சன்னி லியோன் நடிக்கும் வீரமா தேவி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி செமத்தியாக வைரலாகி வருகிறது.

வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்து வரும் ‘வீரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சன்னி லியோன் தற்போது நல்ல நல்ல படங்களாகத் தேடி நடித்து வருகிறார். அந்த வகையில் பெண்ணை மையப்படுத்திய ‘வீரமாதேவி’ படத்தில் அவர் நடித்துள்ளார். வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார் சன்னிலியோன்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply