சிம்பு – கவுதம் மேனன் – ஏ. ஆர். ரகுமான் கூட்டணியில் கடந்த பிப்ரவர் மாதம் அறிவிக்கப்பட்ட ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படம் இன்று பெயர் மாற்றப்பட்டு ‘வெந்து தனிந்தது காடு’ என்ற புதிய தலைப்புடன் சிம்புவின் வித்தியாசமான கெட்டப்பில் வெளியானது. இன்னிலையில் தீடீர் தலைப்பு மாற்றித்திற்கான காரணங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
கொரோனா முதல் அலை காலகட்டத்தில் சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் இவர்களது கூட்டணியில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் லாக்டவுனில் வெளியாகி, ஒரு பக்கம் கமெண்டுகளையும் மற்றோரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்தது.
அதன்பின் விண்ணைதாண்டி வருவாயா 2-ம் பாகத்திற்கான பேச்சுகள் இல்லாமல் போனது.
பிறகு நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் அறிவிப்பு வெளியானது. முதலில் இப்படத்தில் சிம்பு ஒரு ஹீரோ கேரக்டரிலேயே படம் முழுவதும் வருவதுபோல திரைக்கதையை அமைத்திருக்கிறார் கவுதம் மேனன். அதன்பின் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
இன்னிலையில் மனம் மாறிய சிம்பு ஒரு ராவாண கதையில் நடிக்க வேண்டும் என கவுதம் மேனனிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது படத்தின் கதையையே மொத்தமாக மாற்றியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அக்கினி குஞ்சொன்ரு கண்டேன்’ என்ற நாவலை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறார் கவுதம் மேனன். இன்று வெளிவந்த ‘வெந்து தணிந்த காடு’ பஸ்ட் லுக் போஸ்டரிலும் ஜெயமோகன் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Simbu movie update: சிம்புவா இது? ரசிகர்கள் அதிர்ச்சி; மாஸ் ஃபர்ஸ்ட் லுக்
சிம்புவின் 47வது படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்க அங்கு சிம்பு கையில் நீண்ட கம்பு உடன் லுங்கி சட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் மிகவும் சின்ன பையனாக சிம்பு இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தற்போது திருச்செந்தூரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் அதன் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ரிலீஸ்கான வேலையில் அப்படக்குழு இறங்கியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற ஆன்தாலஜி படம் இன்று நெட்பிலிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…