ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை ஓடிடியில் நடத்த உள்ளனர். அந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்க உள்ளார். போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை இரண்டு போட்டியாளர்களை உறுதி செய்துவிட்டனர்.இந்நிலையில், நிர்வாண யோகா பயிற்சியாளரும், நடிகரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான விவேக் மிஸ்ராவை அணுகிய நிகழ்ச்சியாளர்கள், பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக யோகா செய்யுமாறு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து விவேக் மிஸ்ரா கூறியதாவது; “பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொள்ளுமாறு கேட்டனர்.
நிகழ்ச்சியை காரசாரமாக்க வேண்டும். எனவே, நிர்வாண யோகா அல்லது அரை நிர்வாண யோகா செய்ய வேண்டும் என்றனர். அதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.
நிகழ்ச்சியை பரபரப்பாக்கும் 5 முன்னாள் போட்டியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்கள். ஒரு நல்ல நிகழ்ச்சியில் ஏன் நிர்வாண யோகா செய்ய வேண்டும். நான் நிர்வாணமாக யோகா செய்ய வேண்டும் என்றால், எனக்கு நாள் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்றேன்.
நான் வளர்ந்து வரும் நடிகர்; நிர்வாண யோகா மூலம் நிகழ்ச்சியில் வர விரும்பவில்லை. ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது தொகுப்பாளரை நம்பி மட்டும் இல்லை; போட்டியாளர்கள் தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். போட்டியாளர்கள் நன்றாக இருந்தால்தான் நிகழ்ச்சி வெற்றி பெறும். நான் பிக் பாஸ் ஓடிடியில் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டேன்” என்றார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…