Categories: சினிமா

விபத்து நடந்தது இப்படித்தான்.. நடிகை யாஷிகா ஆனந்த விளக்கம்..!

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 24ம் தேதி இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் பயணித்த கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில், யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து யாஷிகா ஆனந்த் கூறியதாவது; “எனது 6 வருட தோழியான பவனி மாடலிங் செய்து பின்னர் அதில் இருந்து விலகி வெளிநாட்டில் வேலை பார்த்தார்.பெற்றோரை பார்க்க ஹைதராபாத் வந்த அவர் என்னை சந்திக்க சென்னை வந்தார்.
ஜூலை 24ம் தேதி இரவு நாங்கள் நான்கு பேர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு விடுதியில் உணவு சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் சென்னை திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.காரை நான்தான் ஓட்டினேன். கண்டிப்பாக நான் வேகமாக ஓட்டவில்லை. சாலை இருட்டாக இருந்ததால் துரதிர்ஷ்டவசமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பில் காரை மோதி விட்டேன். மோதிய வேகத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து மூன்று தடவை உருண்டது. எனக்கு அருகில் இருந்த பவனி சீட் பெல்ட் அணியாமல் காற்று வாங்க ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்து இருந்ததால் விபத்து ஏற்பட்டதும் ஜன்னலுக்கு வெளியே போய் விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது.மற்ற மூன்று பேரும் காருக்கு உள்ளேதான் இருந்தோம். கார் கதவு பூட்டி இருந்ததால் எங்களால் வெளியே வர முடியவில்லை. பிறகு கண்ணாடியை உடைத்து வெளியே வந்தோம். சில நிமிடங்களில் கூட்டம் கூடியது. என்னால் எழுந்து நிற்க முடியவில்லை. அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டோம். நான் குணமடைந்த பிறகே பவனி இறந்த தகவலை சொன்னார்கள்.நான் அன்றைய தினம் குடிக்கவில்லை. எந்த வித போதை பொருளையும் பயன்படுத்தவும் இல்லை. எதிர்பாராமல் நடந்த விபத்து. அதற்கு முழு பொறுப்பும் நான்தான். குற்ற உணர்ச்சியோடுதான் இனி வாழவேண்டும். நான் பிழைத்து இருக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago