Categories: சினிமா

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய். இவருடைய திறமையான நடிப்புக்கென்று நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சாக்லேட் பாய் ஜெய்க்கு நிறைய பெண் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கின்ற புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Related Post

இந்த திரைப்படத்தை இயக்குனர் பத்ரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு காட்சியின்போது மேஜை உடைக்கின்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்பொழுது ஜெயின் தோள்பட்டையில் ஃபிராக்சர் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரை பிசியோதெரபி குழு பரிசோதித்து ஓய்வெடுக்க கூறியது.

ஆனால், அதை பொருட்படுத்தாமல் படக்குழுவின் நலன்கருதி அன்றைய மீதமுள்ள காட்சிகளை நடித்து முடித்துக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சிகிச்சை எடுக்க சென்றுள்ளார் ஜெய். குறிப்பிட்ட தேதிகளை தவற விட்டு விட்டால் படக்குழுவிற்கு அது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்ட ஜெய் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவை படக்குழுவினர் மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago