Categories: சினிமா

டிவி தொகுப்பாளராக புதிய அவதாரத்தில் நடிகை தமன்னா

பிரபல நடிகை தமன்னா டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதேபோல், தெலுங்கு நடிகர் கோபிசந்த் உடன் இவர் நடித்துள்ள ‘சீட்டிமார்’ வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும், மற்றொரு தெலுங்கு நடிகர் நிதின் ஹீரோவாக நடிக்கும் ‘மேஸ்ட்ரோ’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில், தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார். அவர் தொகுத்து வழங்க இருப்பது தமிழ் டிவி நிகழ்ச்சி அல்ல, அதுவொரு தெலுங்கு நிகழ்ச்சி.
இந்திய தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்டார் பிளஸில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட ‘மாஸ்டர் செஃப்’ தான் அது.

Related Post

இந்த நிகழ்ச்சி இப்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எடுக்கப்பட இருக்கும் நிலையில், தெலுங்கு வெர்ஷனைதான் தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கும், இதற்காக அதிக தொகையை ஊதியமாக பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, இதே நிகழ்ச்சியை மற்ற தென்னிந்திய மொழிகள் ஆண் நடிகர்கள் தொகுத்து வழங்க, ஒரே ஒரு பெண் நடிகராக தமன்னா தெலுங்கில் தொகுத்து வழங்க இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago