Categories: சினிமா

‘இந்தியன் 2’ தாமதம்: உண்மை நிலவரம் சொல்லும் காஜல் அகர்வால்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதமாவதற்கான உண்மையான காரணம் குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கமல் – லைகா நிறுவனம் கருத்து மோதல் உள்ளிட்ட பல காரணங்களால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடராமல் இருப்பதாகக் கோலிவுட் வட்டாராங்களில் கூறப்பட்டு வருகிறது.

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது வரை எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து எந்தவொரு தகவலுமே இல்லை. அதற்குள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ மற்றும் தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மும்முரமாகிவிட்டார் கமல். இதர நடிகர்களும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். இயக்குநர் ஷங்கரோ ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Related Post

எனவே, ‘இந்தியன் 2’ என்ன ஆனது என்பது குறித்து தெளிவாக எந்தத் தரப்பிலும் தகவல் வரவில்லை. இந்நிலையில் ‘மோஸகாள்ளு’ என்கிற தெலுங்குப் படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் ‘இந்தியன் 2’ பற்றிக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த காஜல் அகர்வால், ‘இந்தியன் 2’ படத்தில் பணியாற்ற வேண்டிய முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அமெரிக்காவில் இருப்பதாகவும். கரோனா கட்டுப்பாடுகளால் அவர்களால் பயணம் செய்ய முடியவில்லை என்றும், அவர்களுக்கான நெருக்கடி நீங்கி, இந்தியா வந்ததும் படப்பிடிப்பு தொடரும் என்றும் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago