Categories: சினிமா

எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க! தங்கை மகனை வெறுப்பேற்றும் சிம்புவின் க்யூட் வீடியோ

சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட, ஆட வைப்பது என பன்முக திறமை உடையவராக சிம்புவை ஆக்கிவிட்டார் டி ராஜேந்தர். மிகவும் குறைந்த வயதில் சிம்பு தொட்ட உச்சங்கள் ஏராளமோ ஏராளம். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, சிம்புவின் இந்த அசுர வளர்ச்சி அவரை அதலபாதாளத்திற்கு தள்ளியது.

நடிகர் சங்கம் ரெட் கார்ட் கொடுக்கும் அளவுக்கு சென்றது நிலை. உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான தோற்றத்தில் இருந்தார். எனினும் ஊரடங்கு நாட்களை தனக்கு ப்ளஸாக மாற்றிவிட்டார் சிம்பு. ஆன்மீகமும் உடன் இணைய லாக் டவுனில் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறி ஆச்சர்யப்படவைத்தார்.

ஈஸ்வரன் சொன்னபடி பொங்கல் ரிலீஸ், மாநாடு கடைசி கட்ட ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது. அடுத்ததாக கவுதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல என மனிதர் செம்ம பிஸி.

Related Post

இந்நிலையில் சிம்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய வீடியோ ஒன்றை தாய்ப்பாசம் என தலைப்பு வைத்து அப்லோட் செய்துள்ளார். அம்மா உஷா ராஜேந்தர், சிம்புவுக்கு உணவு ஊட்டி விடும் வீடியோ தான் அது. பக்கத்தில் தங்கை இலக்கியாவின் மகன் ஜேசன் அபி இவரிடம் பேச, ‘உங்க அம்மா உனக்கு ஊட்டிவிடுற மாதிரி… எங்க அம்மா எனக்கு ஊட்டிவிடுறாங்க’ என பேசுகிறார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோ பார்க்க லிங்க் க்ளிக் செய்க

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago