Categories: சினிமா

நெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’

கொரோனா வைரஸ் தாக்குதலினால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் புதிதாக டிஜிட்டல் தளத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஓடிடி தளங்களின் மவுசு மிக அதிகமாகவே கூடியுள்ளது.

உலகம் தழுவிய வியாபாரம் என்பதால் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் ஓடிடி தளங்கள் தற்போது இந்தியாவில் வலுவாக காலூன்றி உள்ளன. இந்திய சினிமாவின் இயக்குநர்களை வைத்தே தங்களுக்கென்று தனியாக சினிமாக்களை உருவாக்கி வருகின்றன.

அந்த வரிசையில் சமீபத்தில் அமேஸான் ஓடிடி தளத்தில் ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக ‘புத்தம் புதுக் காலை’ வெளியானது.

இதேபோல் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் 9 முன்னணி தமிழ் இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்தத் தயாரிப்பில் மணிரத்னத்துடன், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இணைந்துள்ளார்.

Related Post

‘நவரசா’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தமிழ்த் திரைப்படவுலக இயக்குநர்களான கே.வி.ஆனந்த், கௌதம் மேனன், விஜய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன் ராம், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத் மற்றும் அரவிந்தசாமி ஆகியோர் இயக்குகிறார்கள்.

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் ஒன்பது பகுதிகளில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ரேவதி, நித்யா மேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் 9 பாகங்களிலும் 9 ஒளிப்பதிவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஆந்தாலஜி திரைப்படம் மிக விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago