Categories
சினிமா தலைப்புச்செய்திகள்

விஜய்சேதுபதி வெளியிடும் ஹாலிவுட் பட டீசர்.!

ஹாலிவுட் படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி நாளை வெளியிட உள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகதிறமைகளை கொண்டவர். இவர் ‘ ட்ராப் சிட்டி’ எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கை பா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக விக்கி ப்ருச்சல் இயக்கும் இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்க உள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடிக்க உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதையை இந்த டிராப் சிட்டி.

சுவாரசியமான கதையம்சம் கொண்ட இப்படம் அமெரிக்காவில் இருக்கும் நேஷவில் என்னும் இடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்தபின்பு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 11 மாலை ஐந்து முப்பது இப்படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட இருக்கிறார்.

Leave a Reply