Categories
சினிமா

கருவேப்பிலை மற்றும் பேரிச்சம்பழம் கலந்த ஜூஸ் குடியுங்கள்!

கருவேப்பிலை மற்றும் பேரிச்சம்பழம் கலந்த ஜூஸ் குடியுங்கள்!

உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் நாம் கருவேப்பிலை சேர்க்கிறோம். ஆனால் சிறு குழந்தைகள் அந்த கருவேப்பிலைகளை தூக்கி எறிந்துவிடுவார்கள். சில பெரியவர்களும் அதை சாப்பிடுவதில்லை. ஆனால் கறிவேப்பிலை நமக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது. முக்கியமாக நாம் கருவேப்பிலை ஜூஸ் செய்து குடித்தால் அதில் ஏற்படும் பலன்கள் எண்ணற்றவை. கருவேப்பிலையை தினமும் உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும். கருவேப்பிலையின் விட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் முக்கியமான இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதற்கும் கருவேப்பிலையை விட மிகச் சிறந்த மருந்து எதுவும் இல்லை.
ஒரு கை பிடி கறிவேப்பிலையுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து நன்றாக அரைத்து கால் லிட்டர் அளவு டம்ளரில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கருவேப்பிலை மற்றும் பேரிச்சம்பழம் கலந்த ஜூஸ் குடித்து விடவேண்டும். இப்படி குடித்தால் ஒரு மாதத்தில் ஒரு யூனிட் ரத்தம் உற்பத்தியாகும். இது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன். கண்டிப்பாக இரத்தம் உற்பத்தியாகும்.

குழந்தைகள் கருவேப்பிலையை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு கறிவேப்பிலை மற்றும் பேரிச்சம்பழத்தை கலந்து ஜூஸ் கொடுங்கள். குழந்தைகளுக்கு அளவு குறைவாக கொடுத்தால் போதுமானது.இப்படி அவர்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுத்து வந்தால் ஹீமோகுளோபின் அதிகமாவதுடன் கண்பார்வையும் நன்றாக தெரியும். பேரிச்சம்பழம் சேர்ப்பதால் இனிப்பாக இனிப்பாக இருக்கும்.அதனால் அவர்கள் விரும்பி குடிப்பார்கள்.

மற்றும் இன்னொன்று கறிவேப்பிலையுடன் பெரிய நெல்லிக்காய் சேர்த்து அரைத்து ஜூஸ் குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

கறிவேப்பிலையுடன் கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை வாய்வு நிறைந்த வாழைக்காய், உருளைக்கிழங்கு செய்யும்பொழுது கடைசியில் அந்த பொடியை தூவி வைத்து விடுங்கள். வாய்வினால் தொந்தரவு ஏற்படாது.

செரிமானப் பிரச்சனைக்கு கருவேப்பிலை மிகவும் உதவுகிறது. அதற்காகவே நாம் உணவுகளிலும் கருவேப்பிலை அதிகம் செய்கின்றோம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கொஞ்சம் கறிவேப்பிலையை பச்சையாகவே சாப்பிட்டு வந்தால் ஜீரண கோளாறு குறையும்.

கருவேப்பிலையை காயவைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்  நாள்பட்ட சளி கரைந்து வெளியேறிவிடும்.        கருவேப்பிள்ளை கொழுப்புச் சத்துக்களை குறைக்க மிகவும் உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கருவேப்பிலையை பச்சையாகவே சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக சீராக வைக்க உதவுகிறது.

கூந்தல் வளர்வதற்கு கருவேப்பிலையை தவிர உகந்தது வேறு எதுவுமில்லை. செம்பருத்தி பூவுடன் கருவேப்பிலை இரண்டையும் மிதமான சூட்டில் உள்ள தேங்காய் எண்ணையுடன் சேர்த்து வைத்துவிடவேண்டும். அது நன்றாக ஆறியபின் வடிகட்டி விட்டு தினமும் கூந்தலில் தேய்த்து வந்து பாருங்கள். கூந்தலின் இளநரையும் மறைந்து கூந்தலும் கருகருவென்று வளர தொடங்கிவிடும். செம்பருத்திப் பூவையும் கருவேப்பிலை இரண்டையும் அரைத்து தேங்காய் எண்ணையுடன் கொதிக்க வைத்து வடிகட்டியும் பயன் படுத்தலாம்.

Leave a Reply