Categories
சினிமா தலைப்புச்செய்திகள்

“அழகான ஓவியத்தின் மீது அடிக்கப்படும் சேர்” கண்டனம் தெரிவித்த பாரதிராஜா..!!

இயக்குனர் பாரதிராஜா சமூக ஊடகங்களில் நடிகர் விஜய், சூர்யா குறித்து அதிகரிக்கும் அவதூறு பேச்சுகளை கண்டு அதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் தமிழ்சினிமாவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் உள்ளது என நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் வாரிசு அரசியலின் தயாரிப்புகள் என மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் கோபமடைந்த விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்தனர்.
நடிகை சனம் ஷெட்டி மீரா மிதுன் விஜய் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பற்றியும் சூர்யா மனைவி ஜோதிகா பற்றியும் அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மீரா மிதுன் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்தேன் என கூறி தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் நடிகர்கள் குறித்து அவதூராக பேசுவதற்கு இயக்குனர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்” நடிகர் சங்கம் உட்பட எந்த சங்கமும் எதிர்ப்பு தெரிவிக்காதது வியப்பாக உள்ளது. நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் கண்ணியமான குடும்ப வாழ்க்கை நம் கண் முன்னே கண்ணாடி போல நிற்கிறது. அழகிய ஓவியத்தின் மீது சிலர் சேர் அடிப்பது போல பேசுவது கண்டனத்திற்குரியது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் பணியை சூர்யா செய்து வருகிறார். நடிகர் விஜய் சத்தமே இல்லாமல் மனிதாபிமான பணிகளை செய்து வருகிறார். நடிகர் விஜயும் சூர்யாவும் பல்வேறு அடித்தளங்களை அமைத்து உயரத்திற்கு வந்துள்ளனர்.” என பாரதிராஜா கூறியுள்ளார்.

Leave a Reply