Categories
சினிமா

சிரிச்சா தங்கம் டா! தளபதியின் லேட்டஸ்ட் தோற்றத்தை புகழந்த டிவி சானல் பிரபலம்! தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகவிருக்கும் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு படம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கால் எந்த படப்பிடிப்புகளும் நடத்தப்படவில்லை. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. மாஸ்டர் படத்தின் டிரைலர் என்று வெளியாகும் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள நடிகரும் நண்பருமான சஞ்சீவ் உடம் இன்று ஆன்லைனில் கெட் டூ கெதர் நடத்தியுள்ளார்.

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த இந்த சந்திப்பின் புகைப்படத்தை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள டிவி சானல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம் தீனா சிரிச்சா தங்கம் டா என விஜய்யின் தோற்றத்தை கண்டு பெருமிதம் கொண்டுள்ளார்.

Leave a Reply