Categories
சினிமா

விஜய் 64: புத்தாண்டு இரவு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்பிரைஸ் – தயாரிப்புக்குழு அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஜய் / தளபதி 64. இதில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, ஸ்ரீமன், விஜே ரம்யா, 96 பிரபலம் கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

2020 கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகவுள்ளதால் சென்னை, டெல்லி, கர்நாடகா என படத்தின் படபிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நடிப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யபடுத்தினாலும், படத்தின் தலைப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட தகவல் குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்ததால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விஜய் 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் ட்விட்டரில் அறிவித்தது.

இதனையடுத்து, வெகு நாட்களாக படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்ததோடு #Thalapathy மற்றும் #Thalapathy64Update என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கியதால் அவை இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முன்னணியில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply