விஜய்க்கு தைரியம் இருந்தால் சிவகார்த்தியேனோடு மோதட்டும்! – அரசியல் பிரபலம் அதிரடி கருத்து

ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயன் என அடையாளம் காட்டும் என்று மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா கூறியுள்ளார். சுமார் கால்நூற்றாண்டுக்கும் அதிகமாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது அந்த இடத்தைப் பிடிப்பதற்காக பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினியை அடுத்து முன்னணி நடிகர்களாக தமிழ்த்திரையுலகில் வலம் வரும் விஜய், அஜித், ஆகியோரை அவரவர் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராகவே பாவித்து வருகின்றனர். இந்த போக்கு ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களிலும் அவ்வப்போது பேசுபொருளாகிறது.சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய் தான் என்றார்.
மேலும் நடிகர் சிம்பு, விஜய் இடத்தில் இருக்க வேண்டியவர் என்று கூறிய சீமான், நேரம் தவறாமையை சிம்பு கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில் இதுகுறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்திருக்கும் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா, சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் கடந்த 40 ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் கைவசம் தற்போது 4 படங்கள் இருப்பதாக சீமான் கூறியிருக்கிறார்.மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அசோக் நகர் இடம் கைப்பற்றப்பட்ட போது மறைந்த முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைத்தார் விஜய். தலைவா பட பிரச்னையின் போது ஜெயலலிதாவிடமும், மெர்சல் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் சரண் அடைந்தவர் நடிகர் விஜய். ரஜினிகாந்த் அப்படி இல்லை.பாபா படம் நஷ்டமடைந்த போது யாருடைய உதவியையும் நாடாத ரஜினிகாந்த், நஷ்டமடைந்த தயாரிப்பாளருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்த மிகச்சிறந்த பண்பாளர்.சினிமா தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் பிறந்து சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டி போட சொல்லுங்கள் பார்க்கலாம். வசூலில் யார் கில்லி என்று தயாரிப்பாளர் கூறிவிடுவார்கள்.ரஜினிகாந்துக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டும்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: ரஜினி VS கமல்… யார் பிக்பாஸ்?

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago