Categories
சினிமா தலைப்புச்செய்திகள்

ஆட்டத்திற்கு வரும் ஜில் ஜில் ஜியோ ஜிகா பைபர் – பீதியில் உறையும் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள்

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஜியோ ஜிகாஃபைபர் திட்டம் வந்தால் தங்களுக்கு பெருத்த நட்டம் ஏற்படும் என்று படத் தயாரிப்பாளர்களும், மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களும் பீதியில் உறைந்துள்ளனர்.

ஏற்கனவே ஏர்டெல், வோடஃபோன் போன்ற பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தையை கதிகலக்கிய ரிலையன்ஸின் ஜியோ சேவை, இப்போது இன்னும் விஸ்வரூபம் எடுத்து ஜியோ ஜிகா ஃபைபர் (Jio Gigafiber) எனும் புதிய திட்டம் வழியாக டெலிகாம் சந்தைக்குள் களம் இறங்கியுள்ளது.

மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை நினைத்து பீதியடைந்துள்ளனர். ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் இப்படி ஒளிபரப்பப்பட்டால் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கதிகலங்குகின்றனர்.

இந்த புதிய திட்டம் வரும் 2020ஆம் ஆண்டு மத்தியில் ஜியோ ஜிகா ஃபைபர் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது வருடாந்தர கூட்டத்தில் அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.

இந்த ப்ரீமியம் திட்டத்தின் மூலம் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் அதே நேரத்தில் ஜிகா ஃபைபர் வழியாக ஒளிபரப்பாகும். அதை அத்திட்டத்தில் சேர்ந்துள்ள ப்ரீமியம் சந்தாதாரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இருந்து கொண்டே அப்படங்களை கண்டு மகிழலாம் என்று அறிவித்துள்ளார்.

இந்த ஒரே திட்டம் மூலம் டிவி அல்லது மொபைல் போன் ஸ்ட்ரீமிங் (Streaming) மூலம் படங்களை ஜியோ செட்டாப் பாக்ஸின் வாயிலாக படங்களை பார்க்கலாம். இத்துடன் ஜியோ வாய்ஸ் கால் வசதியும் ஒரே இணைப்பின் மூலம் பெறலாம்.

இதற்கிடையில் மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தை நினைத்து பீதியடைந்துள்ளனர். ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் இப்படி ஒளிபரப்பப்பட்டால் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கதிகலங்குகின்றனர் மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள்.

ஏற்கனவே, மால்களிலும், மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள், அங்கிருக்கும் உணவகங்களை எட்டிக்கூட பார்ப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம், படத்தின் டிக்கெட்டை விட, அங்கிருக்கும் உணவகங்களில் உள்ள உணவுகளின் விலை பல மடங்கு அதிகம் என்பதால், அநத் உணவகங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுவதுண்டு.

இந்த நிலையில் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வந்தால், அங்கிருக்கும் உணவகங்களிலும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும். சீக்கிரத்திலேயே உணவகங்களுக்கு பூட்டு போட வேண்டிய நிலை வரும். நல்ல திரைப்படம் என்றாலும், அதன் இன்றைய வாழ்நாள் சராசரியாக 4 முதல் 7 நாட்கள் தான். அந்த குறைந்த நாட்களில் கூட சினிமா ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தால் பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று அஞ்சுகின்றனர்.

இருப்பினும் மால்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ்களும் அதனை சார்ந்த மற்ற வணிகர்களும் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பது ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் என்ன மாதிரியான திரைப்படங்கள், என்னென்ன விலைக்கு ஒளிபரப்பப்படும் என்பதை பொருத்தே அமையும் என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி.

இவர்கள் ஒரு பக்கம் தவிக்க மற்றொரு பக்கம் தடுமாற்றத்தில் இருப்பவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள். இந்த முதல் நாள் முதல் காட்சி (First day First Show) திட்டம் சில ஆண்டுகள் முன்னர் நமது உலக நாயகன் கமல்ஹாசன் முயற்சி செய்தது. தன்னுடைய விஸ்வரூபம் படத்தை இந்த திட்டம் மூலம் ஒளிபரப்ப நினைத்தார். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்க வில்லை.

பின்னர் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் சி2எச் (cinema to home-C2H) எனும் திட்டம் மூலம் தனது படங்களை ஒளிபரப்பி இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எண்ணினார். அதற்காக அவர் பல லட்சங்களை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திட்டம் வெற்றி பெறாததால் மிகுந்த நஷ்டம் அடைந்தார். கமல்ஹாசன் மற்றும் சேரனால் சாத்தியமாகாது இந்த ஜியோ ஜிகா ஃபைபரின் முதல் நாள் முதல் காட்சி திட்டம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது ஒரு கேள்விக்குறி.

Leave a Reply