Categories
உலகம்

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்!

பாகிஸ்தானில் 108 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கராச்சிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் கராச்சி அருகே சென்றபோது தீடீரென அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விமானத்தில் 99 பயணிகள் மற்றும் 8 விமான […]

Categories
உலகம்

உலக கோப்பைக்குப் பதில் ஐபிஎல் போட்டியா..??ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆதங்கம் .!!!

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கிடையில் 15 அணி வீரர்கள் ஒரு நாட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொண்டு போட்டிகளில் கலந்து கொள்வது எளிதான காரியம் அல்ல. இதனால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இதுகுறித்து விரைவில் ஐசிசி முடிவு எடுக்க இருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை மழைக்காலத்திற்குப் பிறகு நவம்பரில் நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ […]

Categories
உலகம்

சீனாவுக்கு வெளிப்படையான ஆக்கிரமூட்டல்: போம்பியோ

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாய் இங்-வெனை கூறப்படும் “அரசுத் தலைவராக” அழைத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒரே சீனா என்ற கொள்கையையும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையிலான மூன்று கூட்டறிக்கைகளின் விதிகளையும் இச்செயல் கடுமையாக மீறியுள்ளதுடன் சீனாவின் உள் விவகாரத்திலும் தலையிட்டுள்ளது. இது, சீனாவின் மீதான வெளிப்படையான ஆக்கிரமூட்டல் செயலாகும். தவிரவும், தனிப்பட்ட முறையில் லாபம் பெறும் வகையில், அபாயங்களை உண்டாக்கும் செயலின் மூலம், அமெரிக்க […]

Categories
உலகம்

கனடாவில் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரம் ஆக உயர்வு

கனடா: பலி எண்ணிக்கை 6 ஆயிரம் ஆக உயர்வு… கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,031ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 119பேர் உயிரிழந்ததோடு, 1,030பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,142ஆக உயர்ந்துள்ளது. மேலும், 33,335பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,776பேர் பூரண குணமடைந்து […]

Categories
உலகம்

பிராம்ப்டனில் போதை பொருள் வைத்திருந்த 4 பேர் கைது

கனடா: போதைப்பொருள் வைத்திருந்த 4 பேர் கைது… காலேடன் மற்றும் பிராம்ப்டனில் பெருமளவான போதைப் பொருள் வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஒன்றாரியோ மாகாண வீதிக் குற்றப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலேடனில் மூன்று வீடுகளையும், பிராம்ப்டனில் இரண்டு வீடுகளிலும் பொலிஸார் சோதனை செய்த போது, இரண்டு வாகனங்கள், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் மற்றும் பல பொருட்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், இதன்போது அரை மில்லியன் டொலர் பணத்தை பறிமுதல் செய்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது, பிராம்ப்டனைச் […]

Categories
உலகம்

தைவானில் பிரிவினைவாத கோரிக்கைகளை ஏற்க முடியாது: சீனா

சீனாவில் இருந்து தைவான் பிரிந்து செல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தைவானுக்கான சீன செய்தி தொடர்பாளர் மா சியோகுவாங் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஜப்பானின் ஆளுகையில் இருந்த தாய்லாந்து, உலகப்போருக்கு பின்னர் சீனாவில் ஆளுகைக்கு கீழ் வந்தது. ஆனால் தாங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் நாங்கள் தனிநாடு என தைவான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இதனை தொடர்ந்து மறுத்துவரும் சீனா, தைவான் ஒரு தனி நாடு இல்லை எனவும் சீனாவின் ஒரு […]

Categories
உலகம்

கரோனா ஊரடங்கால் புற்றுநோய் சிகிச்சையில் இருந்த சகோதரியைப் பார்க்க முடியாமல் தவித்த பெண்: நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சந்திப்பு

”உண்மையைக் கூற வேண்டும் என்றால் நான் தற்போது இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்கிறார் கிறிஸ்டின் ஹார்சர். புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் தனது சகோதரியை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த மகிழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளுக்குக்கிடையே இன்னும் எல்லைப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக தங்களது நேசத்துக்குரியவர்களைப் பார்க்க முடியாத தவிப்புக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அந்த வகையில் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்டின் ஹார்சர் ஆஸ்திரேலியாவில் […]

Categories
உலகம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை அதன் பலவீனத்தைக் காட்டுகிறது: ஈரான் விமர்சனம்

ஈரான் அதிகாரிகள் மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகள் அதன் பலவீனத்தைக் காட்டுகிறது என்று ஈரான் அரசு விமர்சித்துள்ளது. ஈரானில் பெட்ரோல் உயர்வை எதிர்த்து நவம்பர் மாதத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்தச் சம்பவம் மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கா, ஈரான் உள்துறை அமைச்சர் ரஹ்மானி பாசில் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. […]

Categories
உலகம்

மீண்டும் மாயமான கிம்… கையை பிசையும் அமெரிக்கா!

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாக சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஏப்ரல் 15- ஆம் தேதி நடைபெற்ற, தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் கிம் அந்த விழாவில் அவர் பங்கேற்காதது […]

Categories
உலகம்

இது ஒற்றுமைக்கான நேரம்: அமெரிக்காவின் மிரட்டல்களுக்கிடையே உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கிடையே உலக சுகாதார அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. கரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். அதில், ‘அடுத்த 30 நாட்களுக்குள் கரோனா வைரஸ் தொடர்பாக அடுத்தகட்ட மேம்பாடுகளுக்கான நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு எடுக்கவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்திய நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும். மேலும் அந்த அமைப்பில் […]