Categories
உலகம் தொழில்நுட்பம்

சீன அதிபரின் பெயரை தவறாக மொழி பெயர்த்த விவகாரம்: மன்னிப்பு கோரிய பேஸ்புக்!

சீன அதிபரின் பெயரை தவறாக மொழி பெயர்த்த விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மியான்மர் நாட்டிற்கு சீன அதிபர் ஜீஜின்பிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சீன அதிபரை வரவேற்று மியான்மர் அமைச்சர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பர்மா மொழியில் இருந்த அந்த பதிவு, தானியங்கி முறையில் பேஸ்புக்கில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. அதில் சீன அதிபரின் பெயர் ஆங்கிலத்தில் ஆபாசமாக மொழிப்பெயர்க்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பேஸ்புக் மன்னிப்பு கேட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு […]

Categories
உலகம்

சீனாவை மிரட்டும், ‘கொரனோ’ வைரஸ்: கோவை விமான நிலையத்தில், அெலர்ட்’

கோவை,:சீனாவை அச்சுறுத்தும் ‘கொரனோ வைரஸ்’ எதிரொலியாக, கோவை விமான நிலையத்தில் வெளிநாடு சென்று திரும்பும் பயணியரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில், ‘கொரனோவைரஸ்’ என்ற ஒரு வகை நச்சுக்கிருமி வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்குள்ளவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டு உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ‘இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’ என, உலகசுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘சீனா செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக […]

Categories
உலகம்

‘பிரெக்சிட்’ வெற்றி கொண்டாட்டம் ஜன., 31க்கு தயாராகிறது பிரிட்டன்

லண்டன்:’பிரெக்சிட்’ எனப்படும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை குறிக்கும் வகையில், வரும், 31ம் தேதி, பல்வேறு கொண்டாட்டங்களுக்கு பிரிட்டன் தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன.ஓட்டெடுப்புஇந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் […]

Categories
உலகம்

முஷாரப் சரணடைந்தால் தான் மனு ஏற்க முடியும்: நீதிமன்றம்

இஸ்லாமாபாத்:’துாக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கவேண்டும் என்றால், பர்வேஸ் முஷாரப், முதலில் சரணடைய வேண்டும்’ என, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கடந்த, 2007ம் ஆண்டு, பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்,74, நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர், பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, 2013ம் ஆண்டில் பிரதமராயிருந்த நவாஸ் ஷெரிப் அரசு, முஷாரப் மீது, தேச துரோக வழக்கு தொடர்ந்தது. […]

Categories
உலகம்

விமானத்தில் சென்ற பெண்ணுக்கு கட்டாய கர்ப்ப பரிசோதனை

ஹாங்காங்:ஹாங்காங் விமான நிலையத்தில், விமானத்தில் ஏறுவதற்காக சென்ற பெண்ணுக்கு, ஊழியர்கள் கட்டாய கர்ப்ப பரிசோதனை நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, வடக்கு மரியானா மற்றும் சைபன் தீவுகள், இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த தீவுகளில் குழந்தைகள் பிறந்தால், அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன்படி, ௨௦௧௮ல், இந்த தீவுகளில், ௬௦௦ குழந்தைகள் பிறந்தனர். இவர்களில், ௫௭௫ பேரின் தாய், சீனாவை […]

Categories
உலகம்

இந்த மாத இறுதிக்குள் அமைதி ஒப்பந்தம்

காபூல்: இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று தலிபான் பயங்கரவாதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். இதுகுறித்து தலிபான்களின் தலைமை செய்தித் தொடா்பாளா் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் வரை, எங்களது தாக்குதல் நடவடிக்கைகளை குறைக்க முடிவு செய்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று உறுதியா நம்புகிறோம் என்றாா் அவா். ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் […]

Categories
உலகம்

மரண தண்டனைக்கு எதிரான முஷாரஃப் மனு: திருப்பியனுப்பியது உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் திருப்பி அனுப்பியது. இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது: தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிா்த்து, அவா் சாா்பில் அவரது வழக்குரைஞா் சல்மான் சஃப்தாா் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், முஷாரஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள […]

Categories
உலகம்

நேபாளத்தில் பனிச் சரிவு: 7 போ மாயம்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தென் கொரியா்கள் உள்பட 7 போ மாயமாகினா். இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: இமய மலைத் தொடரின் மிகப் பெரிய மலைகளில் ஒன்றான அன்னபூா்ணாவில் வெள்ளிக்கிழமை கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது. அதன் காரணமாக, அந்த மலையின் 10,600 அடி உயரத்தில் திடீா் பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கிய சுமாா் 200 பேரை மீட்புக் குழுவினா் மீட்டனா். எனினும், நிலச்சரிவுக்குப் பிறகு அங்கிருந்த 7 பேரைக் காணவில்லை. அவா்களில் 4 போ […]

Categories
உலகம்

பிரெக்ஸிட் கொண்டாட்டங்கள்: பிரிட்டன் திட்டம்

லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதையொட்டி (பிரெக்ஸிட்) நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, நிதியமைச்சா் சாஜித் ஜாவித் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த மாத இறுதியில் பிரெக்ஸிட் நிறைவேறுவதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எனினும், புதிய விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய நிறுவனங்களுடன் பிரிட்டன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடியாமல் போகும். இதனால், சில துறைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். நமது சந்தை முன்பைப் […]

Categories
உலகம்

.உக்ரைன் விமான கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும்

ஒட்டாவா: சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானிடம் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூரோ வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. அந்தக் கருப்புப் பெட்டிகளிலிருந்து தகவல்களை விரைவாகப் பெற்று, ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பத் திறனும், அதிநவீன சாதனங்களும் ஈரானிடம் இல்லை. அந்தக் கருப்புப் பெட்டிகள் ஆய்வு செய்யப்படுவதற்கு உகந்த நாடு பிரான்ஸ்தான். எனவே, உக்ரைன் விமானம் […]