ராஜஸ்தான் மாநிலத்தில், 5 வயது குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்ததால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹு என்ற மாவட்டத்தில் 5 வயது குழந்தை , வீட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக […]
Category: தமிழகம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைக்கோரிய வழக்கில் நாளை (06.12.2019) தீர்ப்பை வழங்குகிறது உச்சநீதிமன்றம். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 என இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (06.12.2019) தொடங்குகிறது. இருப்பினும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யக் கோரி திமுக உள்ளிட்டோர் தொடர்ந்த […]
தமிழகத்தின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 6 கோடியே தொன்னூற்று எட்டு லட்சம் ரூபாயும், மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 212 கோடி ரூபாயும் வசூலாகிறது என்று மக்களவையில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த நிதி ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து சாலைப் போக்குவரத்து சுங்க வரியாக 2 ஆயிரத்து 549 கோடி ரூபாயும், நாடு முழுவதும் உள்ள 570 சுங்கச்சாவடிகள் மூலம் […]
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையை ஆறு மாதத்திற்குள் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று, மீன் வியாபாரிகளை ஒழுங்ப்படுத்துவது, நடைப்பாதை வியாபரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகளில், சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்காக மாநகராட்சிக்கு முழு சுதந்திரம் கொடுப்பதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், மெரினாவை தூய்மைப்படுத்துவது குறித்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, இவ்வழக்கை இம்மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. newstm.in
மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரை பலி வாங்கியது, தீண்டாமை சுவர் தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியான இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், விபத்தை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக்கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வழங்கிய இழப்பீடு தற்காலிகமாக தான் உள்ளது எனக்குறிப்பிட்ட சீமான், அவர்களின் படிப்பிற்கு ஏற்றார் போல் வேலை வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.மேட்டுப்பாளையம் நடூரில் வீடுகள் இடிந்த இடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பொறுப்பற்ற செயலால் 17 பேர் உயிர் பலியாகியுள்ளது. வெறும் கற்களை வைத்து சிமெண்ட் வைக்காமல் கட்டியுள்ளனர். உரிமையாளரின் வீட்டு கழீவுநீர் இங்கே சுவர் அருகே விடப்பட்டுள்ளது. இதை நான் தீண்டாமை சுவராகத்தான் நான் பார்க்கிறேன். மக்கள் […]
தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொகுதி வரையறை, வார்டு வரையறை, புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை மற்றும் பெண்கள் ஆதிதிராவிடர் பழங்குடியினர் அவர்களுக்கான இட ஒதிக்கீடு மற்றும் தற்போது புதிய அவசர சட்டத்தின் மூலம் மறைமுக தேர்தலாக அறிவிக்கப்பட்ட பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மேயர் […]
சூடான் தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 23 பேர் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையில் பணி செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், ராஜசேகர் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், ஜெயக்குமார், முகமது சலீம், பூபாலன் உள்ளிட்ட 130 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் […]
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூரில் சிவசுப்பிரமணியம் என்பவரது வீட்டுச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இந்தச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த மக்கள் பலமுறை புகாரும் அளித்துள்ளனர். ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, 17 பேர் உயிரிழந்ததாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் பல இடங்களில் சாலையை மறித்தும் ஆபத்தான வகையிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதாகவும் […]