Categories
அரசியல்

அமளியால் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்…வீண்!: அலுவல்கள் நடக்காததால் மசோதாக்கள் தேக்கம்

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், பார்லிமென்ட் தொடர்ந்து முடக்கப்பட்டதால், நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டு உள்ளது. லோக்சபாவில், 15 சதவீதம், ராஜ்யசபாவில், 19 சதவீதம் மட்டுமே அலுவல்கள் நடந்துள்ளன. இதனால், ஜி.எஸ்.டி., தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தேக்கமடைந்துள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், நவ., 16ல் துவங்கியது; கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக, ஆளும், பா.ஜ., தரப்புக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்புக்கும் […]

Categories
அரசியல்

மத்திய அரசு திட்டத்திற்கு தமிழகம் ஆதரவு : ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

மதுரை: ”மத்திய அரசின் உதய், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற நல்ல திட்டங்களை தமிழக அரசு ஏற்பதை வரவேற்பதில் என்ன தவறு இருக்கிறது,” என, மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார்.அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் வர்தா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. மத்திய அரசுடன் மாநில அரசு ஒற்றுமை யாக செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லத் திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசு புயல் சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் என மத்திய […]

Categories
அரசியல்

அரசு ஊழியர் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்வு

சென்னை:தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி, முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: திருத்திய ஊதியம் பெற்றுள்ள, மத்திய அரசு அலுவலர்களுக்கு, ஜூலை, 1 முதல், 2 சதவீதம்; திருத்திய ஊதியம் பெறாத, மத்திய அரசு அலுவலர்களுக்கு, 7 சதவீதம் என, அகவிலைப்படியை, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, அகவிலைப்படி, ஜூலை, 1 முதல், 7 சதவீதம் […]

Categories
அரசியல்

ஜெ.,க்கு அளித்த சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை: ஸ்டாலின்

‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.ஸ்டாலின்: அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது, அரசு, எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சுகாதாரத் துறை அமைச்சரும், செயலரும், எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த, ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிடவில்லை.அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மட்டுமே, அவ்வப்போது அறிக்கைகள், அதுவும் முரண்படாக வெளியிடப்பட்டன. எனவே, ஜெயலலிதா மரணம் பற்றிய சந்தேகம் தீர்வதற்கு, […]