Categories
Featured அரசியல்

ராதாவாக மாறிய சப் இன்ஸ்பெக்டர் மாதவி அக்னிஹோத்ரி… தாதாவைப் பிடிக்க காதல் வியூகம்!

கடந்த 2017- ம் ஆண்டு, பீகாரில் ஒரு வித்தியாசமான காதல் கதை அரங்கேறியது. பாகல்பூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருந்த பிரீத்தி குமாரிக்கு, கூலிப்படைத் தலைவன் மிது ஷா மீது கண்டதும் காதல் ஏற்பட்டது. சுரேஜ்பூர் நீதிமன்றத்தில் பணியில் இருந்தபோது, மிது ஷாவை ப்ரீத்தி பார்த்துள்ளார். அப்போது, காதல் பற்றிக்கொண்டது. பிறகு என்ன… மிது ஷாவுடன் டூயட்தான். மிது ஷா ஜாமீனில் வெளியே வந்த பிறகும் ப்ரீத்தி தொடர்ந்து அவருடன் ‘டச்’ சில் இருந்துள்ளார். மிது ஷாவின் […]

Categories
Featured அரசியல்

அஜ்மல் கசாப்பின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக் கொண்ட துக்காராம் யார்?#MumbaiAttack26/11

விவசாய நிலம், மலைகள் என இயற்கை வளங்களுக்கிடையே 250 வீடுகளை மட்டுமே கொண்ட சிறிய கிராமம் கெடாம்பி (Kedambe). மகாராஷ்டிர மாநிலத்தின் இயற்கை எழில் பொங்கும் கிராமங்களில் கெடாம்பியும் ஒன்று. மும்பையிலிருந்து 284 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கெடாம்பி. இந்த கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் ஒரு வளைவு வைக்கப்பட்டுள்ளது. துக்காராம் ஒம்லேவின் புகைப்படம் கொண்ட அந்த பேனர் வளைவில் `தியாகி துக்காராம் ஒம்லே’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். `யார் இந்த துக்காராம்?’ என்ற கேள்விக்கான விடைதான் இந்தக் […]

Categories
அரசியல் இந்தியா

இந்தியாவை உலுக்கிய வியாபம் முறைகேட்டில் தீர்ப்பளித்தது சிபிஐ நீதிமன்றம்.!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மாநில தொழில்கல்வி தேர்வு வாரியம் (வியாபம்) காவல்துறை காவலர் பணிக்காக தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டனர். பின்னர் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் […]

Categories
Featured அரசியல்

`என்ன நடந்தாலும் என் ஆன்மிகப் பணி தொடரும்!’- வெளிநாட்டுக்குத் தப்பிய நித்யானந்தா

கர்நாடக மாநிலம் பிடதியில் மிகப்பெரிய ஆசிரமம் நடத்திவருகிறார் நித்யானந்தா. அதன் கிளை ஆசிரமங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டுவருகின்றன. அப்படி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் இருக்கும் தங்கள் மகளை மீட்டுத் தரக்கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஜனார்த்தன ஷர்மாவின் புகாரை அடுத்து, நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது கடத்தல், மிரட்டல் பிரிவுகளில் குஜராத் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். […]

Categories
அரசியல்

நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும் : ஓ.பி. எஸ்

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘யார் எந்த கட்சி தொடங்கினாலும் அது அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. அரசு முறை பயணமாகத் தான் அமெரிக்கா சென்றேன். அங்கு உலக முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். உலக வங்கியிடம் சென்று பேசினோம். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பயணமாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ‘மேலவளவு கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்து […]

Categories
அரசியல்

ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர முயற்சி -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சின்பிங் சந்திப்பு நடைபெற்றது.வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இது கருத்தப்பட்டது.இதேபோன்று இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ருசீகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது பிரதமர் நரேந்திர மோடியை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியே வருகிறார் சசிகலா! சசிகலாவுக்கு ஆதரவாக நிற்கும் பாஜக!!

சசிகலா சிறையில் இருந்து வெளி வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றுவருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் 11 மாதம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். […]

Categories
Featured அரசியல்

அயோத்தி தீர்ப்பு குறித்து சீமான் பரபரப்பு கருத்து!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. மேலும் அயோத்தி வழக்கு குறித்து மோடி கூறிய போது, […]

Categories
Featured அரசியல்

கல்யாண் சிங் முதல் யோகி ஆதித்யநாத் வரை… அயோத்தி வழக்கில் `நீதி’யின் பங்கு என்ன? – பகுதி 5

உச்சநீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அதற்கு உத்தரப்பிரதேச அரசு உடன்படும் என்பதுதான் கல்யாண் சிங் கொடுத்த வாக்குறுதி. அந்த மாநிலத்தின் இன்றைய முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்னதும். ஆனால் நீதிமன்றங்களின் உத்தரவை ஒவ்வொரு முறையும் உத்தரப்பிரதேச அரசு மீறியதுதான் 70 ஆண்டுக்கால சர்ச்சைக்குக் காரணமாக இருந்திருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள இடத்தில் பூஜைக்காகக் கூடியதாகச் சொல்லி 70,000 பேர் நுழைந்தார்கள். தொடக்கத்தில் கரசேவகர்கள் பூஜையில் ஈடுபட்டதாகவே துணை இராணுவக் குழுக்கள் வாக்குமூலம் அளிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி மற்றும் […]

Categories
Featured அரசியல்

நீங்கதான் மெச்சிக்கணும்… எஸ்.வி.சேகருக்கு நடிகை கஸ்தூரி பதிலடி!

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று பலர் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மிகப்பெரிய வெற்றி. 2016-17ல் வங்கிகளில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுக்களின் மதிப்பு 43.47 கோடி, 2017-18ல் 23.35 கோடி, 2018-19ல் 8.24 கோடி . ‘நம்ம நாட்டு ₹நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தானுக்கு வித்தவங்களால் […]