Categories
இந்தியா

உரிமம் ரத்தாகும்; அடிமையானவர்களுக்கு மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது: கேரள முதல்வருக்கு மாநில மருத்துவர் சங்கம் கடிதம்

திருவனந்தபுரம்: மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் முதலில் கொரோனா வைரஸ் கேரளாவில் கால் பதித்தது. மாநிலத்தில் தற்போது வரை வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியவாசிய பொருட்களான பால், காற்கறி உள்ளிட்டவை மட்டும் விற்பனை […]

Categories
இந்தியா

ஏப்ரல் 7ம் தேதிக்குள் தெலங்கானாவில் கரோனா வைரஸ் இல்லாத நிலை உருவாகும்: சந்திரசேகர ராவ்

ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் தெலங்கானாவில் கரோனா வைரஸ் இல்லாத நிலை ஏற்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதில் தெலுங்கானா மாநிலத்தில் 70 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ‘கரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் முழுவதும் குணம் அடைந்த பின்னரே […]

Categories
இந்தியா

வாரணாசியில் சிக்கிய தமிழர்களுக்கு உதவிக்கரம்: உணவு, உறைவிடம் அளித்த குமாரசாமி மடம், ஐஏஎஸ் அதிகாரி

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சுமார் 400 தமிழர்கள் சிக்கி உள்ளனர். அவர்களில் 110 பேருக்கு கேதார்காட் எனும் கங்கை கரையில் உள்ள தமிழகத்தின் குமாரசாமி மடம் உதவி வருகிறது. பல நூற்றாண்டுகள் பழைமையான இந்த மடத்தில் சென்னை 14, திருச்சி 56, மதுரை 13, திருப்பூர் 15, ஒசூர் 9 மற்றும் தென்னிந்தியர்கள் என 110 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் 3 வேளையும் தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இது […]

Categories
இந்தியா வணிகம்

கரோனா எதிரொலி: வாட்ஸ்ஆப் சேவை குறைப்பு; வாடிக்கையாளர்கள் அதிருப்தி

வாட்ஸ்ஆப்-இல் முன்னதாக 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 வினாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் மக்களின் பொழுதுபோக்காக தொலைக்காட்சியும் மொபைலுமே உள்ளன. அதிலும் மொபைல் போனிலே மக்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் பல தங்களது பணியாளர்களுக்கு வீட்டிலிருந்து […]

Categories
Featured இந்தியா

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பசியுடன் தவிப்பவர்களுக்கு தினமும் 50 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள்

திருமலை: திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலை அடுத்த தர்மகிரியில் உள்ள வெங்கடேஸ்வரா வேத பாடசாலையில் உலக நன்மைக்காக கடந்த 25ம் தேதி முதல் சீனிவாச சாந்தி மஹா தன்வந்திரி யாகம் நடந்து வந்தது. நேற்று பூரணாஹூதியுடன் யாகம் நிறைவு பெற்றது. இதில் ஏழுமலையான் கோயில் தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் […]

Categories
Featured இந்தியா

‘வாடகையை அரசே செலுத்தும்’ – அடித்தட்டு மக்கள் பக்கம் பார்வையை திருப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 900 கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீடுகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன. இந்நிலையில் டெல்லியில் வாடகைக்கு குடியிருப்போர்களிடம் வாடகை கேட்டு தொல்லை […]

Categories
Featured இந்தியா

தனது 3 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் அறுவடையை இல்லாதவர்களுக்கு அளிக்கும் விவசாயி

கொரோனா பாதிப்பு காரணமாக பல தொண்டு நிறுவனங்கள் கிராமபுரங்களுக்கு, குடிசைகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றன. பல தரப்பு மக்களும், இல்லாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், தனது மூன்று ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் செய்யப்பட்ட கோதுமை அறுவடையை இல்லாதவர்களுக்கு அளிக்கிறார் மஹாராஷ்டிர விவசாயி ஒருவர். மஹாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் 3 ஏக்கர் நிலத்தில் கோதுமை விவசாயம் செய்து வருகிறார் தத்தா ராம் படேல். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், […]

Categories
Featured இந்தியா

இடம்பெயர்ந்து வந்த 50 ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்ப 2,500 பேருந்துகள்.. ஒரே இரவில் செய்து முடித்து அசத்திய உ.பி முதல்வர்..

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இலட்சக்கணக்கான பேர் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உட்பட வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பீதி நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவும் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் உத்தரபிரதேச மாநிலத்தவர்கள் பல காரணங்களால் சொந்த ஊருக்கு செல்வது நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ரயில்கள் மூலம் குறிப்பிட்ட நகரங்களுக்கு சென்றாலும் அங்கிருந்து சொந்த ஊர் செல்லமுடியாமல் சரியான […]

Categories
Featured இந்தியா

பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே தொழிலாளர்கள்.. என்ன செய்தனர் நாம் கொண்டாடிய நடிகர், நடிகைகள்..

ரயில்வே துறையில் வேலை பார்க்கும் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு தருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றறை பரவாமல் தடுக்க, மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. பிரதமர் மோடியும் நம் நாட்டு மக்களிடம் தங்களால் முடிந்த நிதியை வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார். இதை அடுத்து […]

Categories
Featured இந்தியா

வெளிமாநில தொழிலாளர்களை வெளியேற்றுவோர் மீது கடுமையான நடவடிக்கை…மத்திய அரசு எச்சரிக்கை..

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் போது ஆங்காங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களையும் உள்ளூர் மக்களைப் போலவே பாவிக்க வேண்டும். அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். இதற்காக அரசு பல்வேறு உணவுப் பொருள் வழங்கு நடவடிக்கையை எடுத்து வருகிறது. நிறுவனங்களுக்கும் சில சலுகைகளை வங்கிகள் மூலமாக வழங்க மத்திய ஒப்புக் கொண்டுள்ளது. என்றபோதிலும் நாட்டில் பல நிறுவன-ங்கள் வெளிமாநில தொழிலாளர்களை கட்டாயமாக வெளியேற்றி வருவதாக […]