Categories
தலைப்புச்செய்திகள்

பாகிஸ்தான் விமான விபத்து: குவிந்திருக்கும் சடலங்கள், டி.என்.ஏ சோதனை, கைகடிகாரம் – என்ன நடக்கிறது அங்கே?

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் விமானம் வெள்ளிக்கிழமையன்று கராச்சியில் விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களில் 66 பேரின் உடல் இப்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண கைரேகை மற்றும் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தன் உறவினரின் சடலத்தை அடையாளம் காண கராச்சி வந்த சையத் இம்ரான், “சில சடலங்கள் கோரமாக எரிந்திருப்பதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது” என பிபிசி செய்தியாளர் ரியாஸிடம் கூறியுள்ளார். அவருடைய உறவினரின் சடலத்தை கண்டறிய தன்னுடைய டிஎன் […]

Categories
தலைப்புச்செய்திகள்

அபுதாபியில் இந்திய ஆசிரியர் கொரோனாவுக்கு பலி

அபுதாபி: அபுதாபியில் உள்ள பள்ளியில் மூத்த ஹிந்தி ஆசிரியராக இருந்தவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.இந்தியாவை சேர்ந்த 50 வயதான ஹிந்தி ஆசிரியர், அபுதாபியில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டி அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் அவரது மனைவி, இவர்களது குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பிரார்த்தனை மேற்கொண்டனர். […]

Categories
தலைப்புச்செய்திகள்

பிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் பிபின் ராவத்

புதுடில்லி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது மாத சம்பளத்தில் இருந்து, அடுத்த ஒராண்டிற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளார். இதற்காக பாதுகாப்புஅமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதன்படி ஒரு மாதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு அனைவரும் நிதி அளிக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பலரும் நிதி அளித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் […]

Categories
தலைப்புச்செய்திகள்

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா பாதிப்பு சென்னையில் 10 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி,” தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 587 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 39 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், டெல்லி, கர்நாடகா, கேரளாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி 10,576 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் […]

Categories
தலைப்புச்செய்திகள் தொழில்நுட்பம்

கொரோனா வைரசால் சூழப்பட்டது சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை 10000ஐ நெருங்கியது.

சென்னை: தமிழகத்தில் அரசு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலும் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னை முழுவதும் கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதற்கிடையில் கொரோனா பாதிப்பு இல்லாததால், 41 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த 20ந்தேதி புதிதாக 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 21ந்தேதி பாதிப்பு 567 ஆக உயர்ந்தது. […]

Categories
தலைப்புச்செய்திகள் தொழில்நுட்பம்

கொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி

தி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிஸ்ஸீஸ் (The Lancet Infectious Diseases) என்ற இதழில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, COVID-19 இறப்பு விகிதம் நிபுணர்கள் தெரிவித்த அளவுக்கு மோசமாக இல்லை. ஆனால் இந்த தொற்று 2009-ன் எச் 1 என் 1 காய்ச்சல் தொற்றுநோயை விட மிகவும் ஆபத்தானது, மேலும் வயதுக்கு ஏற்ப, ஆபத்தின் கடுமை உயர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த விகிதம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது. ஏனெனில், ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் தடுப்பு […]

Categories
தலைப்புச்செய்திகள் தொழில்நுட்பம்

காசு கொடுத்தும் பாக்கமாட்றாங்க.! இப்படிப்பட்ட பயனார்களை நீக்க போகும் நெட்ஃப்ளிக்ஸ்

ஆன்லைன் OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்களது நெட்ஃப்ளிக்ஸ் செயலியை உபயோகப்படுத்தாமல் இருந்தால் பயனார்களின் கணக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT ப்ளாட்பார்ம்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் app 190 மேற்பட்ட நாடுகளில் 183 மில்லியன் சப்ஃகிரைபர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களில் சிலர் ஒரு வருடம் மற்றும் அதற்கு மேலாக நெட்ஃப்ளிக்ஸ் செயலில் எதையும் பார்க்காமல் இருக்கிறார்கள் […]

Categories
தலைப்புச்செய்திகள் தொழில்நுட்பம்

பேஸ்புக் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட MARk zuckerberg

பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இனி வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என அந்நிறுவனத்தின் C.E.O MARk zuckerberg அறிவித்துள்ளார். உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக எல்லா நிறுவங்களிலும் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களது வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிரார்கள். உலகின் மிகப் பெரிய […]

Categories
தலைப்புச்செய்திகள்

திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழு ஒன்றையும் […]

Categories
தலைப்புச்செய்திகள்

தனிமை முகாம்களுக்கு செல்லாவிட்டால் சிறை ; மணிப்பூர் முதல்வர் எச்சரிக்கை

இம்பால் : கொரோனா பாதிப்பு காரணமாக மணிப்பூருக்கு திரும்பும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அந்த தனிமை முகாம்களுக்கு செல்லாமல் விதி மீறலில் ஈடுபட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் சிக்கி தவித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பணிக்காகவும், கல்விக்காகவும், மருத்துவ […]