Categories
தலைப்புச்செய்திகள்

மறவாமல் வாக்குச் செலுத்துங்கள்’ விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது பேஸ்புக்.!

தற்போது இந்தியாவினுள் உத்திர பிரதேசம்,உத்திரகாண்ட்,பஞ்சாப்,மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான கோவா விற்கும் மாநில அளவிலான தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நடைபெறவிருக்கிற தேர்தல்களில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும் வாக்கு செலுத்துவதின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்திடவும் தமது வலைத்தளத்தில் புதிய வசதிகளை ஏற்படுத்தவிருக்கிறது. தேர்தல் நாள் அன்று வாக்கு செலுத்துவதனை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் நினைவுபடுத்தும் விதமாக அவர்களின் நியூஸ் பீட் பகுதியில் […]

Categories
தலைப்புச்செய்திகள்

அண்ணா நினைவு நாள் – சசிகலா, ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி இன்று மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். காலை சுமார் 10 மணியளவில் சசிகலா அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று […]

Categories
தலைப்புச்செய்திகள்

தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரம்! தமிழகம் அதிர்ச்சி!!

கோவை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரளா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடுத்துள்ள நிலையில் கேரளா தடுப்பணை கட்டும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இது தமிழக அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய வனத்துறையும் அனுமதி வழங்கி உள்ளது. இந்த 6 தடுப்பணைகளை கட்டப்பட்டால், தமிழகத்திற்க […]

Categories
தலைப்புச்செய்திகள்

குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து – ஆவணங்கள் எரிந்து நாசம்!

டில்லி: டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், அங்கிருந்த சோபா, சேர், நாற்காலி, கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமானதாக […]

Categories
தலைப்புச்செய்திகள்

கடல் என்ன கிணறா? எண்ணூரில் விஜயகாந்த் நையாண்டி

எண்ணெய் கழிவுகளை வாளியில் அகற்றுவதற்கு கடல் என்ன கிணறா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நையாண்டியாக கேள்வி எழுப்பினார். எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 28ம் தேதி ‘எம்.டி.டான் காஞ்சிபுரம் (MT Dawn)’ என்னும் சமையல் எரிவாயு கப்பல் மீது ‘எம்.டி.பிடபுள்யூ மாப்பிள் (BW Maple)’ என்னும் எண்ணெய் கப்பல் மோதியது. இதில் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலில் கலக்கப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகளால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தலைப்புச்செய்திகள்

இந்திய பொருளாதாரத்தின் ஜேம்ஸ் பாண்ட்டிற்கு குவியும் வாழ்த்துகள்!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், தலை சிறந்த பொருளாதார வல்லுனருமான ரகுராம் ராஜனின் 54வது பிறந்த நாள் இன்று. கடந்த செப்டம்பர் 26ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். இவரின் பெற்றோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இந்திய பொருளாதாரத்தின் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்று நெட்டிசன்ஸ் செல்லமாக அழைக்கும் ரகுராம் ராஜனுக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 2014-ம் ஆண்டு ஒரு உரையின் போது ரகுராம், ‘ கறுப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை முழுமையாக […]

Categories
தலைப்புச்செய்திகள்

6 லட்சம் பேரிடம் ரூ.3,700 கோடி மோசடி: கில்லாடி கைது

நொய்டா: இணையதளம் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்தால் பணம் தருவதாக கூறி 6 லட்சம் பேரிடம் சுமார் ரூ.3,700 கோடி மோசடி செய்த பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு கிளிக்கிற்கு ரூ.5: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அப்ளேஸ் இன்போ சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை துவக்கிய அனுபவ் மிட்டல் என்ற பிடெக் பட்டதாரி, இணையதளம் ஒன்றை துவக்கி, உறுப்பினராக வருமாறு அழைப்பு விடுத்தார். அதில் வரும் லிங்கை கிளிக் […]

Categories
தலைப்புச்செய்திகள்

டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதில்!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்க எச்-1 பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என்று ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். புதிதாக பதவி ஏற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகமானது எச்-1 பி விசா வழங்கும் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு […]

Categories
தலைப்புச்செய்திகள்

முஸ்லிம் நாடுகள் தடை: சரியான நடவடிக்கை இல்லை! ஐ.நா. பொதுச்செயலாளர்

நியூயார்க், 7 முஸ்லிம் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிகை அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் கூறி உள்ளார். அமெரிக்கா புதிய அதிபரின் 7 முஸ்லிம் நாடுகளுக்க தடை அறிவிப்பு உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக 7 நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்து உத்தரவிட்டார். […]

Categories
தலைப்புச்செய்திகள்

சென்னை: எண்ணெய் கசிவை அகற்ற புதிய உத்திகளை பயன்படுத்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் கச்சா எண்ணெய் கடல் பரப்பில் பரவுவதை தடுக்க புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக இளைஞருணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது, சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதால் வங்கக் கடலில் ஏற்பட்ட கச்சா எண்ணெய்க் கசிவு எட்டு நாட்களாகியும் இன்னும் அகற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் கடல் பரப்பில் பரவுவதும் கட்டுப்படுத்தப்படாததால், சென்னை மிகப்பெரிய சூழலியல் பேரிடரை எதிர்கொள்ளும் ஆபத்து […]